காலத்தின் சந்திப்பு Jeffersonville, Indiana, USA 56-0115 1ஒளிப்பதிவு செய்கிறவர்கள் உங்களால் கூடுமானால் தயவு செய்து பதிவு செய்வதை சற்று நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். காலை வணக்கம் நண்பர்களே . நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். (டேப்பில் வெற்றிடம்). பாடகரே, நாம் வழக்கமாக பாடும் “அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்'' என்ற பிரதிஷ்டைக்கான பாடலை பாடுங்கள். எல்லோருமாக சேர்ந்து ”சிறு பிள்ளைகளை கொண்டு வாருங்கள்“ என்ற பாடலை பாடுங்கள். கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் பாவத்தின் நிலையிலிருந்து கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள் ஆமென். ஒரு சிறிய குழந்தையிடம் ஏதோ ஒரு இனிமையான காரியம் இருக்கிறதாக நீங்கள் நினைக்கவில்லையா? (சபையார் ஆமென் என்கின்றனர்) அந்த சிறிய பிள்ளையின் பிரகாசமான கண்கள் என்னை நோக்கிப் பார்க்கும் போது; அதில் மிகவும் இனிமையான, அவர்களைப் பற்றிய உண்மையான காரியம் ஒன்று இருக்கிறதைக் காண்கிறேன். அவர்கள் இந்த உலகத்தின் காரியங்களை குறித்து ஒன்றும் அறியாத கபடற்றவர்கள், தேவன் அவர்களை அவ்விதமாகவே தந்துள்ளார். மேலும், இந்த சிறு பிள்ளைகள், அந்த வீட்டில் இருக்கும் மக்களை இணைக்கக் கூடிய அளவிற்கு அவர்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அது ஒரு பிள்ளையின் இணைக்கும் தன்மையாகும். 2இப்பொழுது இந்த சிறுவர்களை குறித்தும் மற்ற காரியங்களைக் குறித்தும் பேசுவதற்கு நமக்கு இன்னும் சற்று அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். ஆனால் நமக்கு நேரம் கிடைக்க அதிகம் பிரயாசப்படுகிறோம். ஆகவே நாம் இப்பொழுது வார்த்தைக்கு நேரடியாகச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஒலிப்பதிவு செய்கிறவர்கள் இந்த காலை செய்தியை பதிவு செய்ய விரும்பினால் அவர்கள் பதிவு செய்யலாம். தேவன் தாமே ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, இன்றைய தினத்திலே நாம் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதைப் போன்று சிறந்த காரியம் ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆகவே தேவனுடைய வார்த்தை எல்லா வீடுகளிலும் வாசிக்கப்பட்டால் நலமாயிருக்கும். இந்த காலை வேளையிலே, ஒவ்வொருவரும், உங்களால் கூடுமானால், சிறு பிள்ளைகளும் அவர்களுடைய ஞாயிறு பள்ளி அறையிலிருந்து வரும்பொழுது கூட, பயபக்தியோடு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவன் இந்த சபைக்கென்று நேற்று இரவிலே எனக்குக் கொடுத்த செய்தியை நான் அவருடைய உதவியோடு பிரசங்கிக்க முயற்சிக்கும் போது நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியாய் அமர்ந்து கேட்பீர்களாக. இப்பொழுது, நாம் வாசிக்க வேண்டிய வேத வசனம் யோவேல் 2 ஆம் அதிகாரம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் 2 ஆம் அதிகாரத்திலும் இருக்கிறது. யோவேல் 2 ஆம் அதிகாரம் 28 ஆம் வசனத்திலும் மற்றும் அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனத்திலிருந்தும் நாம் தொடர்ந்து வாசிக்கலாம். அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரத்தில் நடந்தவைகளைக் குறித்து இந்த தீர்க்கதரிசி, முன்மாரியையும் பின்மாரியையும் வருஷிக்கப் பண்ணுவார் என்று யோவேல் 2 ஆம் அதிகாரத்திலே முன்னதாகவே கூறினது வியப்பாய் இல்லையா? அதை யோவேல் இதே அதிகாரத்தில் தான் கூறியிருக்கிறார். இப்பொழுது நாம் அப்போஸ்தலர் நடபடிகள் 2 ஆம் அதிகாரம் 15 ஆம் வசனம் தொடங்கி சில வசனங்களை வாசிக்கலாம்: நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்ட படியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள் உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன் கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். 3நாம் ஜெபத்திற்காக சற்று தலைகளை தாழ்த்தலாம். எங்கள் இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, இந்த காலை வேளையிலே இந்த கட்டிடத்தில் ஒரு பெரிய திரை விரித்தது போல், ஒவ்வொரு தலையும் பூமியின் புழுதியை நோக்கி தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இதோ நாங்கள் தாழ்மையோடு எங்கள் இருதயத்தையும் எங்கள் தலையையும் உம்முடைய சமுகத்தில் தாழ்த்துகிறோம். பரலோகப் பிதாவே பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது வந்து இந்த வார்த்தைக்குள்ளாகச் சென்று, யாரெல்லாம் தங்களுடைய இருதயத்திலே வார்த்தைக்கென்று இடத்தைக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் நீர் அதை அளிக்கும் படி ஜெபிக்கிறோம். அது தாமே நூறத்தனையாக பலனளிப்பதாக. ஆண்டவரே, இதோ நாங்கள் ஜெபிக்கிறோம், இன்று அவிசுவாசிகள் தாமே விசுவாசிகளாக மாறுவார்களாக. மற்றும் பிரயாணத்திலே விடாய்த்துப் போன கிறிஸ்தவர்கள் புதிய நம்பிக்கையை பெற்றுக் கொள்வார்களாக. பரிசுத்தவான்கள் உற்சாகமடைவார்களாக. வியாதியஸ்தர்கள் சுகமடைவார்களாக. பிதாவே நீர் பேசும் நாங்கள் இப்பொழுது உம்முடைய வார்த்தையைச் சுற்றி ஐக்கியம் கொள்வோமாக. இதை நாங்கள் தேவனுடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 4இந்த காலை வேளையிலே, நாம் ஒரு தலைப்பைக் கொடுக்க வேண்டும் என்றால், “காலத்தின் சந்திப்பு” என்பதே. இதுவே நான் சபைக்கு கொடுக்க இருக்கும் என்னுடைய செய்தியின் பொருள். கடந்து போன நாட்களிலே, காலங்கள் அதனுடைய முடிவுக்கு வந்தடைந்தபொழுதெல்லாம், அது ஒரு சந்திப்பிற்கு வந்தடைந்ததைப் பார்க்கிறோம். நெடுஞ்சாலைகளிலே சந்திப்புகள் இருக்கின்றன. மற்றும் நாம் பயணம் செய்யும் இந்த உலகத்தின் சாலைகளிலேயும் சந்திப்புகள் இருக்கின்றன. அதேபோல் தான் நாம் மகிமைக்கு பிரயாணம் செய்யும் அந்த மகத்தான பழைய பெருவழியிலும் சந்திப்புகள் இருக்கின்றது. இப்பொழுது, சர்வ வல்லமையை (Omnipotence) குறித்து பேச வேண்டுமென்றால்; எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் (miraculous) அவசியமாயிருக்கிறது. சர்வ வல்லமை என்பது சர்வ சக்தியாயிருக்கிறது. அந்த சர்வ வல்லமையை நிரூபனப்படுத்த இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் அவசியமாயிருக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தினால் மாத்திரமே அதைச் செய்ய முடியும். வார்த்தையை போதிப்பது மிக அருமையானது தான், ஏனெனில் விசுவாசமானது தேவனுடைய வார்த்தையை கேட்பதினாலே வரும். ஆனால் சர்வ வல்லமையானது இன்றும் ஜீவித்து அரசாளுகிறது என்பதை இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தைக் கொண்டுதான் நாம் நிரூபனபடுத்த முடியும். அந்த இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை தான் நாம் கொண்டிருக்க வேண்டும். 5மேலும், இதுவரை இந்த உலகம் அறியாத அளவிற்கு சபையானது சர்வ வல்லமையின் மகத்துவத்தை நிரூபிக்கக்கூடிய தருணத்தில் இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். சில காலமாக நான் வேதாகமத்திலே ஆராய்ந்து பார்த்த போது, நான் ஏழு மகத்தான சந்திப்புகளை தேவனுடைய வார்த்தையிலே கண்டிருக்கிறேன். ஏழு என்பது தேவனுடைய முழுமையான எண்ணாகும். அவர் ஏழிலே முழுமையாகிறார். ஆறு நாள் அவர் வேலை செய்து ஏழாம் நாளிலே ஓய்ந்தார். ஆறாயிரம் ஆண்டுகளாக உலகத்தின் ஆளுகையில் சபை பாடுபடுகிறது. (சபையானது பாடுபடும்) அதன் பின் ஏழாவது ஆயிரவருட அரசாட்சி. வேதாகமத்திலுள்ள இந்த கணக்குகளெல்லாம் பரிபூரணமாயிருக்கிறது. மேலும் தேவன் எப்பொழுதுமே குறித்த நேரத்தில் காரியங்களை செய்கிறவராய் இருக்கிறார். சில நேரங்களில் நாம் தான் சற்று கால தாமதமாக்குகிறோம். அல்லது சற்று வேறு விதமாக யோசிக்கிறோம். ஆனால் அவைகளும் ஒரு நோக்கத்திற்காகவே செய்யப்படுகிறது. ஆனால் தேவன் எப்பொழுதுமே தன்னுடைய செய்தியோடே அவர் குறித்த நேரத்தில் வருகிறவராய் இருக்கிறார். 6ஆகவே நாம் இன்றைக்கு சந்தித்து வருகிற இந்த மகத்தான காரியங்களை, சபையானது அறிந்து, புரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது என விசுவாசிக்கிறேன். இவை எல்லாம் எதைக் குறித்தது என்று நாம் தேவனுடைய வார்த்தையிலே தேட வேண்டியவர்களாய் இருக்கிறோம். இந்த காரியம் மாத்திரம் தேவனுடைய வார்த்தையிலே இல்லாமல் இருக்குமானால், அதைக் குறித்து சற்று சந்தேகமுடையவனாய் இருப்பேன். ஆனால் தேவனுடைய வார்த்தை அதைக் குறித்து உரைத்திருக்குமானால், அது எவ்வளவு தான் நம்முடைய வழக்கமான போதனையிலிருந்து முரண்பட்டிருந்தாலும் அந்த போதனையைக் குறித்து நான் அக்கரையில்லாதவனாய் இருப்பேன். ஏனெனில் தேவனே அவருடைய வார்த்தையை செயல்முறைப்படுத்துகிறவராய் இருக்கிறார். ஆனால் அநேக நேரங்களில் அது நம்முடைய சிந்தனைக்கு முரண்பட்டதாய் இருக்கிறது. அல்லது இது போன்று சிந்திக்கும்படிக்கு நாம் போதிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே தேவனுடைய சர்வ வல்லமை நமக்கு முன்பாக செயல்படும் போது அதை இணங்கண்டு கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். 7இப்பொழுது, கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் காரியங்களைக் குறித்து நாம் சற்று நேரம் நம்முடைய சிந்தையின் பின்னாகச் சென்று ஆராய்ந்து பார்க்கலாம். இந்த சுவிஷேசத்தின் ஊழியக்காரனாக, நாம் சரியாக கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையின் தோன்றுதலின் நாட்களுக்கு அருகாமையிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என விசுவாசிக்கிறேன். இது அவருடைய இரண்டாம் வருகையாக இருக்கிறது. அவர் முதல் முறை வந்தபோது ஒரு குழந்தையாக வந்தார். ஆனால் இந்த முறை அவர் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாத யாவரையும் பழி தீர்க்கும்படி மகிமையின் ராஜாவாக வருகிறார். மேலும் நாம் ஜீவிக்கின்ற இந்த குழப்பமும் மன அழுத்தமும் நிறைந்த நாளில், நாம் சற்று நம்முடைய பரபரப்பான தினசரி காரியங்களை விட்டு, செய்தித் தாள்களை எடுத்து அமைதியாக நின்று நம்மைச் சுற்றி நடக்கிற காரியங்களை மற்றும் உண்மை சம்பவங்களைப் பார்ப்போமானால், நாம் எந்த சந்தேகமுமின்றி ஏதோ ஒன்று நடக்கிறதற்கு தயாராக இருக்கிறது என்று காண்போம் என விசுவாசிக்கிறேன். 8மற்றும் தேவன், இதுவரையிலும், அவருடைய வார்த்தையிலே முன் தெரிவித்து, வெளிப்படுத்தி, அதை வார்த்தையிலே பொருத்திக் காட்டாமல் எந்த ஒரு இயற்கைக்கு மேம்பட்ட காரியத்தையும், அல்லது எந்த ஒரு காரியத்தையும், ஒருபோதும் நடப்பித்ததில்லை என விசுவாசிக்கிறேன். அவர் ஏன் அப்படி செய்கிறார் என்றால், அதிலே நடக்க தவறுகிற மனிதன் அவர் முன் வரும்போது அவன் எந்த ஒரு சாக்கு போக்கும் சொல்லக் கூடாத அளவிற்கு அவர் அவ்வளவாய் தெளிவுபடுத்துகிறார். ஆகவே, அவரைக் குறித்து போதுமான அளவிற்கு எவன் அக்கரையுள்ளவனாக இருக்கிறானோ அவன் அதை பிடித்துக் கொள்வான். நீங்கள் அக்கரையுள்ளவர்களாகும் போது; நீங்கள் ஒருபோதும் இரசத்திலே (soup) ஈ விழுந்தால் அதை அப்படியே குடிக்கமாட்டீகள். இல்லை ஐயா, நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள். அதுமட்டுமல்ல, அந்த உணவு பார்ப்பதற்கும் கொஞ்சம் கெட்டுப் போனதாயிருக்கும் பட்சத்தில் நீங்கள் அதைச் சாப்பிட பயப்படுவீர்கள். ஏனென்றால் அது பேடோமின் (Ptomaine) போன்ற விஷத்தை கொண்டிருக்கிறதினால் அதை சாப்பிடும் பட்சத்தில், அது உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று போடும் என்று அறிந்திருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் உங்கள் சரீரத்தை நீங்கள் பராமரித்துக் கொள்கிறீர்கள். அதேபோல் தான், உங்கள் ஆத்துமாவையும் இந்த கெட்டுப் போன உலகத்திற்குரிய காரியங்களைக் கொண்டு புசிக்கும்படி அனுமதிப்பீர்கள் என்றால் அது உங்களை அழிவிற்கு கொண்டு செல்லுமேயன்றி வேறு எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் எவ்வளவுதான் இந்த சரீரத்தை பராமரித்தாலும் மற்றும் அந்த உணவு எவ்வளவு நன்றாக இருந்தாலும், அல்லது அந்த சரீரம் எப்படி இருந்தாலும், அது இந்த பூமியின் மண்ணிற்கே திரும்ப வேண்டியதாயிருக்கிறது. ஆனால் ஆத்துமாவோ எங்கோ ஓரிடத்தில் என்றென்றுமாய் ஜீவிக்கும். ஆகவே இந்த உலக காரியத்தினாலே நான் என் ஆத்துமாவை கெடுத்துப் போடுவதை காட்டிலும், எப்பொழுதும் கெட்டுப்போன ரசத்தையே (soup) குடித்துவிடுவேன். 9இப்போது சந்திப்புகளைப் பார்க்கும்போது, மகத்தான சந்திப்புகள் வருமுன்னர், அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் முடிவடைந்து வேறு ஒன்றை அவர் புதிதாய் துவங்கு முன்னர், அல்லது பழைய காலம் புதியதோடு சந்திக்குமிடத்திலே, அல்லது ஒரு யுகம் மற்றொன்றுக்கு மாறுவதற்கு முன்னர், தேவன் எப்பொழுதுமே தன்னுடைய வல்லமையை காண்பிக்கிறவராய் இருக்கிறார். ஆனால் மனிதர்களோ காலங்களினூடாய் அதை எப்பொழுதுமே மாற்றி வேறுவிதமாய் போதித்து, வேறுவிதமாய் கற்பித்து, அதை குலைத்துப் போட்டு உண்மையான ஜீவிக்கின்ற தேவனிடத்திலிருந்து விலகிப் போனார்கள். ஆனால் தேவன் ஒரு புதிய காலத்திற்குள் பிரவேசிக்கும் முன்னர், அதாவது அந்த சந்திப்புகள் வருமுன்னர், அவர் மகத்தான இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களோடும் அடையாளங்களோடும் காட்சியிலே காணப்படுகிறவராயிருக்கிறார். அவர் எப்பொழுதுமே அவ்விதமாகவே செய்கிறார். உலகத்தினுடைய முதலாவது பேரழிவை நோக்கிப் பாருங்கள். அதுதான் முதல் சந்திப்பு. தேவன் உலகத்தை உண்டாக்கி மனிதனை பூமியின் மேல் வைத்த பிறகு, மக்கள் பெரிய பட்டிணங்களை கட்டத் தொடங்கினார்கள் என்று வேதம் கூறுகிறது. அப்போது உலகத்திலே மகத்தான கட்டுமான பணிகள் நடைபெற்றன. இன்றும் அவ்விதமாகவே நடக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். இயேசு தெளிவாக “நோவாவின் நட்களிலே நடந்தது போலவே மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்'' என்றார். அதே காரியம் தான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 10அவர்கள் சரியாக அந்த பெரு வெள்ளத்தின் பேரழிவிற்கு முன்னர் செம்பு, பித்தளை மற்றும் இரும்பு போன்ற உலோகங்களை உபயோகப்படுத்தக் கூடிய வழியைக் கண்டு பிடித்திருந்தார்கள் என்பதை அறிவீர்கள். மேலும் நாம் வாழும் இந்நாட்களிலுள்ள கட்டிடங்களை நோக்கிப் பாருங்கள். மக்கள் பூமியின் மேல் பலுகிப் பெருகினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இப்போது நம்முடைய இந்த சிறிய பட்டணத்தின் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்போமானால், சில வருடத்திற்கு முன்பாக பதினான்காயிரங்களாக இருந்தன. இன்றைக்கோ இருபத்தேழாயிரத்திற்கும் மேலாக இருக்கின்றது. சொல்லப் போனால், உங்களால் இனி முயல்களை கூட வேட்டையாடுவதற்கு போதிய இடம் இல்லாமல் இருக்கக்கூடும். எல்லா இடங்களிலும் வீடு கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அது சரிதான். கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டும், பெருகிக் கொண்டும் இருக்கின்றது. அவர்கள் பலுகி, பெருக ஆரம்பித்த போது பாவமும் பொல்லாங்கான காரியங்களும் உள்ளே புகுந்தது என்றார். அதுவே நாம் சாலையின் முடிவிலிருக்கிறோம் என்பதற்கு மிகப் பெரிய அடையாளப் பலகைகளில் ஒன்றாய் இருக்கிறது. மகத்தான அடையாளங்களில் இதுவும் ஒன்று. 11கவனியுங்கள், அந்த காலத்திலே நிம்ரோத் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன், பாபிலோன் என்னும் பெரிய பட்டணத்தைக் கட்டி அதைச் சுற்றி இருக்கிற எல்லா பட்டணங்களையும் கூட்டமைப்பினால் இணைத்தான். அதன்படி அவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய பட்டணமாயின. அதுவே பாபிலோனாயிற்று. தேவன் அந்த உலக கூட்டமைப்பை அவ்வளவாக வெறுத்தார். இன்றைய நாளிலும் அதே காரியம் தான் நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச தொழிலாளர்களின் இயக்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் போன்ற வெவ்வேறு கட்டுகளாலும் சபை ஸ்தாபனங்களாலும் மக்கள் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மக்கள் இடையே இருக்கும் எல்லாத் தனி கூட்டங்களையும் உடைத்து எல்லா தடைகளையும் அகற்றி எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்திருக்கிறது. கூட்டமைப்புதான், முதல் அழிவின்போது தேவன் தந்த மகத்தான அடையாளங்களில் ஒன்று. அதுவே மீண்டுமாய் கடைசி அழிவின் போதும் தோன்றுகிறதைக் காண்கிறோம். உங்களால் அதை பார்க்கமுடிகிறதா? 12கவனியுங்கள். அந்நாளிலே, வேறொரு காரியமும் நடந்தது. அந்த மகா கலக்கமான நேரத்திலே, புருஷர்களுடைய இருதயம் மிகவும் குளிர்ந்து தேவனிடத்திலிருந்து விலகிப் போனபோது, ஸ்திரீகள் அவர்களுக்கு விக்கிரகங்கள் ஆகிபோனார்கள். தேவ புத்திரர்கள் மனுஷ குமாரத்திகள் மிகவும் செளந்தரியமுள்ளவர்கள் என்று கண்ட போது அது பாலுணர்ச்சியின் முறைமையாக மாறிப்போனது. இப்போது, நாம் ஜீவிக்கின்ற இந்த நாளை நோக்கிப் பாருங்கள். (நான் மரியாதைக்குரிய பெண்களைக் குறித்துப் பேசவில்லை, இல்லை ஐயா, அவர்கள் தேவனின் கருவிகள்.) ஆனால் அவர்களைக் காட்டிலும் அதிகமானோர் “பெண் கொணடும் பெண் கொடுத்தும்” தங்களைக் குறித்து அக்கரையில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். நான் அவர்களைப் பற்றி தான் பேசுகிறேன். அவ்விதமாகத் தான் இருக்கும் என்று தேவன் வேதத்திலே கூறியிருக்கிறார். நோவாவின் நாட்களானது முடிவிற்கு வருமுன், அவர்கள் பெண் கொண்டும் பெண் கொடுத்தும் இருந்தார்கள் என்று இயேசு சொன்னார். இன்று உலகத்திலே கலக்கம் அதிகமாய் இருக்கிறதை நாம் காண்கிறோம். இவை எல்லாம் இப்படி இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அதாவது வலிய, பொல்லாத ஆவிகள் இறங்கி மக்களுக்குள்ளாக புகுந்து இந்தக் காரியங்களை செய்தது என்று வேதம் கூறினதை நாம் உணர்கிறோம். அதே அசுத்த ஆவிகள் தான் இன்றும் நம்முடைய நாட்களிலே கிரியை செய்து வருகிறது. இப்பொழுது கவனியுங்கள், முழு பாதாளமும் திறக்கப்படும்போது முழு பரலோகமும் திறக்கப்படும். வெள்ளம் போல சத்துரு வந்தாலும், கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றகிறார். (தன் தரத்தை உயர்த்துகிறார்). ஆகவே இந்த இரண்டு வல்லமைகளும் எப்பொழுதுமே சந்திப்புகளிலே வெளிப்படுகின்றன. 13இப்பொழுது நிம்ரோத் தன் காலத்திலே, எல்லா குழுக்களையும் ஒன்றாகச் சேர்த்து, எல்லா மக்களையும் பாபிலோனுக்கு வரவழைத்து ஒரு மாபெரும் கூட்டமைப்பை அமைத்தான். அங்கே பெண்கள் மத்தியில் எல்லா விதமான பாலுணர்ச்சி சம்பந்தப்பட்ட அசுத்தமான காரியங்களும் அது போன்றவைகளும் அவர்களுக்கிடையே நடந்தது. ஆனால் அதே நேரத்தில்தான், தேவன் இந்த பூமியிலே, எந்த குற்றமுமில்லாத அவரோடு நடந்த ஏனோக்கை ஒரு சாட்சியாக கொண்டிருந்தார். அசுத்த ஆவிகள் இந்த பூமியிலே எந்த நேரத்தில் தோன்றினதோ அதே நேரத்திலே துாதர்களும் தோன்றினார்கள். அந்த தூதர்கள் மனிதர்களுக்குள் பிரவேசித்தார்கள். இது இன்றைய நாளிற்கு ஒரு அழகான மாதிரியாக இருக்கிறது. பொல்லாங்கானது தோன்றும் வேளையில் நன்மையும் தோன்றுகிறது. இப்பொழுது அந்த கொடிய நாளில் அழிவு வருவதற்கு முன்பாக, தேவன் அவருடைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி ஒரு சாதாரண, தாழ்மையுள்ள மற்றும் உலகத்தாரைப் போல் அல்லாத, தேவனுக்கு தன் செவியை கொடுக்கும் இருதயமுடையவனாகிய நோவா என்ற மனிதனைக் கொண்டிருந்தார். நோவாவும் ஏனோக்கும் ஒரே சமயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் இப்பொழுது வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரத்தில் கவனிப்பீர்களானால் “கடைசி நாட்களிலே நான் என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கு வல்லமை கொடுப்பேன்” என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டு சாட்சிகள் கடைசி நாட்களிலே மறுபடியும் அனுப்பப்படுவார்கள். அவர்கள் மக்கள் மத்தியிலே அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிப்பார்கள் என்று வெளிப்படுத்தல் 11 ஆம் அதிகாரத்தி கூறப்பட்டிருக்கிறது. 14நோவாவும் ஏனோக்கும் பிரசங்கம் செய்த நாட்களை திரும்பிப் பாருங்கள். நோவா செய்த பிரசங்கம் இந்த உலகத்திற்கு பைத்தியமாய் இருந்தது. கவனியுங்கள், நோவாவோ ஒரு பாதுகாப்பான இடத்திற்காக பேழையை கட்டிக் கொண்டிருந்தான். அதுவே ஒரு அற்புதம் தான். எப்படி ஒரு மனிதன் இதுவரை தண்ணீரே வராத வறண்ட நிலத்தின் மேல் மிக பெரிய கடல் இருக்கப் போவதாகவும், அதிலே மிதக்கிறதற்கென்று ஒரு பேழையை ஆயத்தம் பண்ணி, வானத்திலிருந்து மழை கீழே வரப்போகிறது என்று சொல்ல முடியும்? அப்படி வர வாய்ப்பு இருக்கிறதா? ஆனால் விசுவாசத்தினாலே அவன் செய்தான். அதுவே ஒரு அற்புதம்தான். நோவா தேவனால் எச்சரிக்கப்பட்டு பேழையை ஆயத்தம் பண்ணினான். அதை பார்க்க முடிகிறதா? அது பார்ப்பதற்கு மிகவும் முட்டாள்தனமான காரியமாக இருந்தாலும் பரவாயில்லை, அல்லது மக்களுக்கு எவ்வளவு பைத்தியமாக தோன்றினாலும் பரவாயில்லை, அதுபோன்று ஒரு மனிதன் அதற்காக ஊக்கமாய் சுத்தியலால் அடித்து வேலை செய்து கொண்டிருப்பதே ஒரு அதிசயம் தான். ஆனால் அவர்களுக்கோ அது முட்டாள் தனமாகக் காணப்பட்டது. அதே காரியம் தான் மறுபடியும் இன்றைய நாளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் மிக ஊக்கமாய் பிரசங்கம் செய்து, வரப் போகின்ற நியாயத்தீர்ப்புக்கு மக்களை ஆயத்தப்படுத்தி அல்லது அதிலிருந்து காப்பாற்றும்படி செய்து கொண்டிருக்க, இந்த நாகரீக சபை மக்களோ அதைப் பார்த்து கிண்டலடித்து, சிரித்து, அற்புதங்களின் நாட்களெல்லாம் கடந்து போயிற்று, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் அப்படி பிரசங்கம் செய்வதே ஒரு அற்புதம் தான். இதுவே நாம் சந்திப்பில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளப் பலகை. 15நோவா, தீவிரமாய் வேலை செய்தான். அவன் ஒரு அற்புதத்தை நடப்பிக்கிறது மட்டும் அல்லாமல் அவனும் ஓர் அற்புதத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். அதேபோல் தான் சபையும் இன்று சுவிசேஷத்தை அற்புத அடையாளங்களோடு பிரசங்கிக்கிற பணியில் ஊக்கமாய் ஈடுபட்டு, ஒரு அற்புதத்திற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலிலே சென்று வீட்டிற்குச் செல்வதே அந்த அற்புதம். ஆகவே சபையானது மக்களை வெளிச்சத்துக்குள் வழிநடத்தி, உலக காரியங்களினாலே அவர்களுக்கு வரும் பாரத்தை நீக்கி, அவர்களுடைய ஆத்துமாவை தேவனுடைய சமூகத்தில் நிலைவரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனிமித்தம் ஆயத்தமாயிருப்போர் யாவரும் இயேசுவின் மகிமையின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு மத்திய ஆகாயத்தில் அவரை சந்தித்து அவரோடு கூட இருப்பார்கள். “நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனுஷ குமாரன் வரும் நாளிலேயும் நடக்கும். மக்கள் குடித்தும், புசித்தும், திருமணம் செய்து கொண்டும், பெண் கொடுத்தும் இருப்பார்கள்'' என்று சொன்ன காரியங்களெல்லாம் வெளிப்படையாய் நடக்கிறதை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுடைய தேவன் தாமே உங்களுடைய புரிந்து கொள்ளுதலை திறந்தருள்வாராக. இவைகளெல்லாம் அடையாளப் பலகைகள் என்று பார்க்கும் படியான புரிந்து கொள்ளுதலை தேவன் திறந்தருள்வாராக. மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களெல்லாம் நமக்கு முன்பாக சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் சந்திப்பிலே இருக்கிறோம். 16கவனியுங்கள், நோவா மக்களை எச்சரித்து பிரசங்கம் செய்யத் துவங்கினபோது, அனேகர் அவனைப் பார்த்து பரியாசம் செய்தார்கள், ஏளனம் செய்தார்கள், ஏனென்றால் அவனுடைய செய்தி பார்ப்பதற்கு முற்றிலும் அர்த்தமற்றதாய் இருந்தது. இன்றைக்கும் மக்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், “நாங்கள் உலகத்திலுள்ள மிகச் சிறந்த மருத்துவர்களை கொண்டிருக்கிறோம். இதுவரை எவரும் கொண்டிராத அளவிற்கு மிகச் சிறந்த மருத்துவமனைகளைக் கொண்டிருக்கிறோம். ஆகவே நாங்கள் இவைகளெல்லாவற்றையும் கொண்டிருக்கும் பட்சத்தில் எங்களுக்கு வேறொன்றும் வேண்டியதில்லை” என்கிறார்கள். கவனியுங்கள், தெய்வீக சுகமானது மற்ற நாட்களைக் காட்டிலும் இன்றைக்கே மிக அதிகம் தேவைப்படுகிறது. இன்னும் நாட்கள் போகப் போக நமக்கு தெய்வீக சுகமானது அதிகம் தேவைப்படும். வருகின்ற நாட்களில், ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டாலொழிய, (இது சொல்வதற்கு கடினமாய் இருக்கிறது). அவன் தன்னை எல்லா விதமான காரியத்திற்கும் திறந்து கொடுப்பான். ஆனால் பயங்கரமான வாதைகள் விழும்போது தேவனுடைய முத்திரையை தங்கள் நெற்றியிலே பெற்றவர்களை அவைகள் அண்டாது. நாம் இப்போது சாலைகள் சந்திக்கும் சந்திப்பிலே இருக்கிறோம்! 17இப்பொழுது நோவா தொடர்ந்து மழை வரப்போகிறது என்று கூறி மக்களை எச்சரித்துக் கொண்டிருந்தான் என்று பார்க்கிறோம். மழை என்றால் என்ன என்று அந்த மக்கள் கொஞ்சம் கூட அறியாதிருந்தார்கள். ஏனெனில் மழை இதுவரை அங்கே பெய்ததே இல்லை. மேலும் சுவிசேஷமானது இரண்டாயிரம் ஆண்டுகளாக பிரசங்கிக்கப்பட்ட பிறகும், இன்றும் உலகத்திலே மக்கள் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்பதைக் குறித்து அறியாதிருக்கிறார்கள். சர்வ வல்லமை என்றால் என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். மற்றும் மகத்தான சர்வ வல்லவரான தேவனுடைய வல்லமையானது, தெருவிலுள்ள ஒரு பாவியின் ஆத்துமாவை தேவனுடைய குமாரன் குமாரத்தி என்கிற தேவனுடைய ராஜ்யத்தின் தேவ தூதர்களைப் போன்ற நிலைக்கு அவர்களை மாற்ற முடியும் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர்கள் அவ்வளவாய் உலகத்தின் காரியங்களினால் மோகம் கொண்டு ஈர்க்கப்பட்டு, கண்கள் கவரப்பட்டவர்களாய், உலகத்தின் காரியங்களினாலே இன்பம் அடைகிறார்கள். இது அசுத்த ஆவி என்று கொஞ்சம் கூட உணராமல் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் இன்று தயாராவதற்கு இதுவே மகத்தான அடையாளப் பலகையாக இருக்கிறது. “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல, தேவன் ஏனோக்கின் மூலமும் நோவாவின் மூலமும் அடையாளங்களை காண்பித்த போது உலகம் அதை பார்த்து பரியாசம் செய்தது. ஆனால் ஒரு நாளிலே இடியுடனும், மின்னலுடனும் வானத்திலிருந்து அக்கினி வந்தது. இடியும் மின்னலும் முழங்க ஆரம்பித்தது. இவைகளெல்லாமே தன்னில் தானே ஓர் அற்புதம் தான், மழை அதன் பின்னரே பெய்ய ஆரம்பித்தது. 18ஆனால் அதைக் காட்டிலும் மகத்தான அற்புதம் என்னவென்றால், தேவன், விசுவாசிக்கும் தன்னுடைய பிள்ளையை பாதுகாப்பான பேழைக்குள் மறைத்து வைத்ததே. எந்நேரமும் இடி முழக்கத்தோடு மழைபெய்து கொண்டே இருந்தது, ஆனால் நோவாவோ தேவனுடைய பேழைக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தான். அவன் அந்த பேழைக்குள் போவதற்காக முன்னறிந்து, முன் குறிக்கப்பட்டிருந்தான். வாதைகள் அங்கே நேரிட்டபோது நோவாவோ பாதுகாப்புடன் இளைப்பாறிக் கொண்டிருந்தான். எவன் ஏளனமாய் பேசப்பட்டானோ அவனே பின்னர் அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தான். நீங்களும், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் உங்கள் ஜீவியத்தை முழுமையாய் ஒப்புக் கொடுக்கும்படி வாஞ்சிக்கிறதினால், மக்கள் உங்களையும் பார்த்து கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் நீங்கள் அவருடைய நித்திய புயத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். நீங்கள் அந்த சர்வ வல்லவருக்குள் மிக பத்திரமாக இளைப்பாறுகிறீர்கள் என்பதையும், ஒன்றும் உங்களை சேதப்படுத்தாது என்பதையும் உணராதவர்களாய் இருக்கிறார்கள். அங்கே தண்ணீர் வர ஆரம்பித்ததும் மக்கள் கதறி அழுது கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். பேழையோ அங்கேயே இல்லாமல் அப்படியே மேலே மிதந்து கொண்டிருந்தது. அது நோவாவை, ஒரு தொட்டிலில்போட்டு ஆட்டுவதைப் போல அலைகளின் மேலாய் கொண்டு சென்றது. நிச்சயமாக அப்படித்தான் இருந்தது. அது ஒரு அடையாளப் பலகை. தேவன் அப்போது இந்த உலகத்திலுள்ள பாவமெல்லாவற்றையும் அகற்றினார். அவர் புதியதான ஒன்றை தொடங்க இருந்தார். ஆனால் அவர் அதை செய்வதற்கு முன்பு அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்தார். 19இப்பொழுது, இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனால் விடுவிக்கப்பட்டு வெளியே வந்தபோது என்ன நடந்தது என்று கவனியுங்கள். தேவன் இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு முன்பாக, அவர் முதலாவது, தான் இன்னும் ஜீவிக்கின்ற சர்வ வல்லவராய் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் பொருட்டு இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை நடப்பித்தார். மக்கள் இந்நாளிலே எண்ணுகிறது போலவே அந்நாளிலும் போதகர்கள் மற்றும் ஆசாரியர்கள் தேவன் இல்லை என்று எண்ணினார்கள். ஆனால் தேவனோ இன்னும் சர்வ வல்லவராயும் அற்புதங்களை நடப்பிக்கிறவராயும் இருந்தார். அவர்கள் தேவன் இல்லாமல் போனார் என்று எண்ணின் அந்த நேரத்திலேயே, தேவன் ஒரு தாழ்மையுள்ள எளிமையான லேவியின் குடும்பத்திற்கு இறங்கி ஒரு குமாரனை கொடுத்தார். அவனே விடுதலையை கொண்டு வருகிறவனாக இருந்தான். அந்த சின்ன மோசே மிக பாதுகாப்புடன் ஒரு பேழையிலே மறைத்து கொண்டு செல்லப்பட்டிருந்தான். இதை ஆழமாக விளக்கிச் சொல்ல நமக்கு போதுமான நேரம் இருந்தால் நலமாய் இருக்கும். அவனை மிக பத்திரமாக அந்த நதியிலிருந்து எடுத்தார்கள் என பார்க்கிறோம். அந்த முதலைகள் மத்தியிலும் மற்றும் எல்லா காரியங்களிலும் இயற்கைக்கு மேம்பட்ட அதிசயமானது நடப்பிக்கப்பட்டது. அங்கே அற்புதங்களின் நாட்கள் நடந்து முடிந்தது என்று எண்ணின அந்த நேரத்திலேயே தேவன் மோசேயை மிக பத்திரமாக பாதுகாத்தார். ஏனெனில் அவர்கள் சந்திப்பிலே இருந்தார்கள். அவர்கள் வார்த்தையைக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் யோசேப்பின் எலும்புகள் இருந்தது. அவையெல்லாம் சரிதான். அவைகளெல்லாம், தேவன் ஒரு நாளில் ஜீவித்தார் என்றும் அவர் ராஜரீகம் செய்தார் என்பதற்கும் அடையாளங்களாயிருந்தது. அது சரிதான். ஆனால் அது மாத்திரமல்ல, அந்த வார்த்தையோடு கூட விழுந்துபோக முடியாத சர்வ வல்லமையுள்ள தேவனைக் கொண்டிருந்தார்கள். அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராய், அவர்கள் மத்தியிலே இருந்தார். 20மோசே தன்னுடைய நாற்பதாவது வயதிலே ஒரு நதியோரம்... அவன் வனாந்திரத்திலே நின்று கொண்டிருந்த போது ஒரு தூதனின் சாயலிலே தேவன் அங்கே இறங்கி வந்தார். அவர் எகிப்தை அழித்து, தன்னுடைய பிள்ளைகளை வெளியே அழைத்து, அந்த காலத்தை மாற்றுவதற்கு முன்பாக, அவர் பூமியிலே தோன்றி எளியோரிடத்திலும் மற்றும் தேவையுள்ளோரிடத்திலும் துதர்களை அனுப்பி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். மற்றும் தேவன் தன்னுடைய மகிமையை மோசேக்கு வெளிப்படுத்தினார். அதனிமித்தம் அவனாலே ஒரு கோலை எடுத்து அற்புதத்தை செய்ய முடிந்தது அவனாலே தன் கையை தன்னுடைய மார்பிலே வைத்து எடுத்தபோது தொழு நோயை குணப்படுத்த முடிந்தது. அது எதை காட்டுகிறது என்றால், நாம் இப்பொழுது காலம் மாறுகிற நேரத்தில் இருக்கிறோம் என்பதையும் சாலை சந்திக்கும் நேரத்தில் இருக்கிறோம் என்பதையும் காட்டுகின்றது. மேலும் அந்த மகத்தான மாறாத தேவன், மாறக் கூடாதவர், அன்று அந்த காலத்தின் சந்திப்பிலே அப்பேற்பட்ட அதிசயங்களைச் செய் தார் என்றால் இன்று காலத்தின் முடிவிலே, முழு பாதாளமும் மிகுந்த சீற்றத்தோடு இருக்கும் நேரத்திலே அவர் எவ்வளவு அதிகம் செய்ய வேண்டியவராயிருக்கிறார். அவர் மாறாதவர். அவர் தோல்வியடையாதவர். இது சர்வ வல்லவரை இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை சந்திக்கிற நேரம். அவர் நிச்சயமாக அதைச் செய்வார். 21இந்த இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை பகுத்தறிய இயலாத மனிதனுடைய எண்ணத்தினால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. அது அவனுடைய அறிவுக்கு எட்டாதது. அதை புரிந்து கொள்ள நீங்கள் அந்த சர்வ வல்லவரை சந்தித்தாக வேண்டும். நீங்கள் அப்படி செய்யும் போது, இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை தொடர்பு கொள்வீர்கள். அப்போது, உங்கள் ஜீவியம் மாறும், உங்கள் சிந்தனைகள் மாறும், உங்கள் யோசனை மாறும், நீங்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாயிருப்பீர்கள். உங்களுடைய வியாதிகள் மறைந்துபோம். ஏனெனில் தேவனுடைய மகத்தான வல்லமை அவ்வளவாக உள்ளே பிரவாகிக்கும். மோசே அந்த புதரண்டையிலே, அந்த சர்வ வல்லமையை கண்டும் அதனுடைய சத்தத்தை கேட்டும் இருந்தான். அவன் அந்த இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தைக் கண்டான். ஆனால் தேவன் மோசேயிடம் ஒரு செய்தியைக் கொடுத்து எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் வெறுமனே பிரசங்கிக்கும் படி அவனை அனுப்புவதில் திருப்தி கொள்ளவில்லை. ஏனெனில் சர்வ வல்லமையுள்ள இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தின் தேவன் இதை ஒரு மனிதனுக்கு மாத்திரம் வெளிப்படுத்துவாரானால் அவர் தேவனாக இருக்க முடியாது. ஆகவே அவர், “இந்த அடையாளங்களை எடுத்துச் செல்'' என்றார், அல்லேலூயா, ”இந்த அடையாளங்களை எடுத்துச் சென்று அவர்களுக்குக் காண்பி, நான் உன்னோடு கூட இருப்பேன்“ என்றார். இது காலம் மாறுதலின் நேரம்! சந்திப்பானது இப்பொழுது வந்திருக்கிறது. ஆகவே இது ஏதோ ஒன்று சம்பவிக்கின்ற நேரமாயிருக்கிறது. ஆனால் அது சம்பவிக்கிறதற்கு முன்பாக தேவன் அவருடைய எச்சரிப்பை தருகிறார். “நான் இன்னும் யெகோவாவாகவே இருக்கிறேன். நான் இன்னும் ஜீவிக்கிறேன். மற்றும்,”நான் சர்வ வல்லவர். நான் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களின் தேவன்“ என்கிறார். 22அவன் அப்படியாக எகிப்திற்கு சென்ற போது, அங்கே அவனுடைய தடியை கீழே போட்டான். அதன் பிறகு தன் கையிலுள்ள குஷ்டரோகத்தை சொஸ்தமாக்கினான். இவ்விதமான காரியங்களைச் செய்தான். இப்பொழுது நீங்கள் இதை கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எப்பொழுதெல்லாம் இவ்விதமான இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் செய்யப்பட்டதோ அப்பொழுதெல்லாம் அந்த அசலான காரியத்தைப் போன்று போலியான ஒன்றை காண்பிக்க சாத்தான் எப்பொழுதுமே இருக்கிறான். அவன் அன்றைக்கு எப்படி போலியானதை செய்தானோ அப்படியே இன்றைக்கும் போலியான காரியங்களைச் செய்கிறவனாய் இருக்கிறான். சொல்லப்போனால், அவனுடைய போலியான காரியங்கள் சந்திப்பில் வரும் முடிவுகாலத்தையே சுட்டிக் காட்டுகிறது. அவர்கள், யந்நே, யம்பிரே, என்று அழைக்கப்பட்ட சில பழமையான குறி சொல்லுகிறவர்களை கொண்டிருந்தார்கள். அவர்கள் அவனுக்கு விரோதமாக எழும்பினார்கள். அவர்கள் தங்கள் கோலை தூக்கி எறிந்தபோது அது சர்ப்பமாக மாறினது. இவ்விதமாக அவர்கள் மோசே செய்தது போலவே கச்சிதமாக செய்தார்கள். ஆனால் தேவன் எது தன்னுடையது என்பதை நிரூபித்துக் காட்டினார். அவர்களால் வாதையை கொண்டுவர முடிந்தது, ஆனால் தெய்வீக சுகமளித்தலை கொண்டுவர முடியவில்லை. ஏனெனில், தேவன் ஒருவரால் மாத்திரமே சுகத்தைக் கொண்டு வரமுடியும். அவர்களால் கொப்பளங்களைக் கொண்டு வர முடிந்தது. ஆனால் அதை எடுத்து போட முடியவில்லை. தேவன், தெய்வீக சுகமளித்தலானது அவருடைய இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமே என்று காண்பிக்க அவருடைய வல்லமையிலே நின்றார். அந்த சந்திப்பின் நேரத்திலே அவர் அவருடைய சர்வ வல்லமையை நிரூபித்தார். எகிப்தியர்கள் கொப்பளங்களை வரவழைத்தார்கள்; ஆனால், அது அவர்கள் மேலேயே விழுந்தது. ஆனால், தேவனுடைய ஊழியக்காரனால் அதையும் எடுத்துப் போட முடிந்தது. பார்த்தீர்களா? அவர்களால் போலியான ஒன்றை செய்ய முடியும். அதே காரியம் தான், இந்த கடைசி நாட்களில் நமக்கும் நடக்கும் என்று நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எப்படி எதிர்த்து நின்றார்களோ, இவர்களும் அப்படியே சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பார்கள்; இவர்கள் துர்புத்தியுள்ள மனுஷர்களாயும், விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், துணிகரமுள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல், சுகபோக பிரியராயும், துரோகிகளாயும், சிற்றின்பப்பிரியர்களாயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்தவர்களாயும் இருப்பார்கள்'' என்று உரைக்கப்பட்டிருக்கிறது. ஓ, நாம் ஜீவிக்கின்ற இந்நாள் சாலைகள் சந்திக்கும் நேரமாய் இருக்கிறது. இது தானே சாலையின் முடிவாகவும் மற்றும் இக்காலத்தின் முடிவாகவும் இருக்கிறது. தேவன் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நாம் ஜீவிப்பதற்கு இது மிகவும் மகத்தான நாளாயிருக்கிறது. 23தேவன் அவர்களுக்கு தன்னை நிரூபித்தார். மற்றும் தன்னை நிரூபனப்படுத்தி அதிலிருந்து மகிமையை எடுத்துக் கொண்டார். ஓ, அவர் எகிப்து தேசத்தை முழுவதுமாய் அடித்தார். அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து இஸ்ரவேலரை, கழுகின் இறக்கைகளின் மேலாக வெளியே கொண்டு வந்தார். ஏனெனில் அவர் நம்முடைய சர்வ வல்லவர். அவர் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்பவர். அவர் பார்வோனின் இரதங்களை மூழ்கடிப்பதற்கு முன்னதாக எல்லாவிதமான அடையாளத்தையும் கொடுத்தார். தெய்வீக சுகமளித்தலின் அடையாளங்கள் மற்றும் எல்லாவிதமான அடையாளங்களையும் கொடுத்து தன்னுடைய வல்லமையை நிரூபனப்படுத்தினார். அவர் ஒரு முதற்பேரான குமாரனைக் காப்பாற்றி, இன்னொரு முதற்பேரான குமாரனை எடுத்துக் கொண்டார். அவர் ஒன்றை கொன்று வேறொன்றை காப்பாற்றினார். அவர் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களைச் செய்தார். சூரியனும் சந்திரனும் இருளானது, கல்மழை தேசத்தை முழுவதுமாய் நிரப்பினது, மின்னல்கள் தேசத்தை தாக்கி கால் நடைகளைக் கொன்று போட்டது. இவைகள் சரியாக நோவாவின் நாட்களில் நடந்தது போலவே நடந்தது. மேலும் அவர், “கடைசி நாட்களிலே, சூரியன் பிரகாசிக்காது. சந்திரனும் தன்னுடைய வெளிச்சத்தை தரக் கூடாமல் போகும். சூரியன் ஒரு கருப்பு கம்பளியை போல் மாறி இரத்தம் சொட்டுகிறதைப் போலாகும்” என்றார். அது தன்னுடைய முகத்தை மறைத்து தனக்குள்ளாக அழுது துக்கித்து, இரத்த வேர்வை துளிகளை சிந்தும் நேரத்திலே தேவன் பூமியின் மேல் சர்வ வல்லவராய் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்து கொண்டிருப்பார். நிச்சயமாக அவர் செய்வார். அவர் சர்வ வல்லவர். இதைச் சிந்தியுங்கள். எகிப்திலே அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் மற்றும் எல்லா காரியங்களையும் எண்ணிப் பாருங்கள். அவர் தேவன் அவருடைய இடத்தை யாரும் எடுக்க முடியாது. 24கவனியுங்கள், தேவன் தன்னுடைய அற்புதத்தை நடப்பித்து பார்வோனுக்கு ஒரு சந்தர்பத்தைக் கொடுத்தார். ஆனால் பார்வோனோ அந்த சந்தர்பத்தை நிராகரித்து அதை எடுத்துக் கொள்ளத் தவறினான். அவ்வளவுதான், அவனுக்கு வேறு எந்த வாய்ப்புமில்லை. ஒரு மனிதன் தேவனுடைய இரக்கத்தை வெறுத்துத் தள்ளிப் போடுவான் என்றால் அவனுக்கு எஞ்சியிருப்பது நியாயத்தீர்ப்பு மட்டுமே. ஆகவே என் அருமையான நண்பனே, இன்று தேவன் நமக்கு உதவி செய்வாராக. இந்த செய்தியின் முடிவிலே, நீ இயேசு கிறிஸ்துவின் , பரிசுத்த ஆவியின் மூலம் உனக்களிக்கப்பட்ட இந்த இரக்கத்தை, வெறுத்து தள்ளுவாயென்றால், உனக்கு தெய்வீக நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் எஞ்சியிருப்பதிலை. இதை தவிர வேறு வழியில்லை. தேவனுக்கு கீழ்படியாமல் பாவஞ்செய்து கிருபையின் நாட்களை தள்ளிப் போட்டதினால் முடிவில் பார்வோனுக்கு வேறு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. ஏனெனில், சந்திப்பு மிக சமீபமாய் இருந்தது. மற்றும் தேவன் அந்த சந்திப்பிலே வெளிப்பட்டார். 25இப்பொழுது லோத்தும் ஆபிரகாமும் இருந்த மற்றுமொரு காலத்தைப் பார்க்கலாம். ஆபிரகாம் உலகத்தை ஆளுகை செய்ய வேண்டியவனாயிருந்தான் மற்றும் அவனுடைய வித்து பூமியெங்கும் பரவ வேண்டியதாயிருந்தது. ஆபிரகாம் தன்னுடைய உறவினனாகிய லோத்துவை தன்னுடன் கொண்டிருந்தான், லோத்து அவனுடைய சகோதரனின் குமாரன் ஆவான். அவன் தானே ஆவியினால் பிறந்திருக்கிறதும் மற்றும் தெரிந்து கொள்ளப்பட்டும், அழைக்கப்பட்டும், வேறு பிரிக்கப்பட்டுமிருக்கிற ஜீவனுள்ள தேவனின் சபைக்கு மாறாய் இன்றைக்கு இருக்கும் குளிர்ந்து போன சம்பிரதாயமான சபைக்கு ஒரு அழகான எடுத்துக் காட்டாய் இருக்கிறான். அவர்கள் இருவருமே ஒரே சமவெளியில் தங்கியிருந்தனர். ஆனால் சமயம் வந்த போது லோத்து தன்னுடைய பெரிய கூட்டத்தாரை அவனோடு அழைத்துச் சென்று சோதோம் கொமோராவிலே குடியேறினான். ஏனெனில் அங்கே தான் அவர்கள் பிரசித்தி பெற்றவர்களாயும் மிகச் சிறந்த நிலங்களைக் கொண்டவர்களாயும் இருக்கமுடியும். ஆனால் ஆபிரகாமோ தேவனுடைய சித்தத்தில் தரித்திருந்து வறட்சியான நிலத்தை எடுத்துக் கொண்டான். அவனும், அவனுடைய அழகான மனைவியாகிய சாராளும் தேவனுக்கு சேவை செய்யும்படி அந்த வறட்சியான இடத்திலேயே தங்கியிருந்தனர். கவனியுங்கள், “தேவன் ஒருபோதும் பூ மெத்தையைப் போல் சுலபமான வழியை வாக்களிப்பதில்லை, எல்லாம் நலமாயிருக்கும், உங்களுக்கு எந்த தீங்கும் நடக்காது, எந்த ஒரு சோதனையும் வராது அல்லது உங்களை எதுவுமே அணுகாது” என்ற தவறான செய்தியை போதிக்க வேண்டாம், அப்படிச் சொல்லி எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் பொய்யை போதிக்காதிருங்கள். அது தவறு. ஒரு கவிஞன் பாடினான், “எல்லோரும் போராடி இரத்தக்களரியான கடலிலே யாத்திரை செய்து பரிசை பெற்றிருக்க, நான் மட்டும் பரத்திற்கு பூ மெத்தையிலே சிரமம் இல்லாமல் அழைத்துகொண்டு போகப்பட வேண்டுமோ?” இல்லை ஐயா! தேவன் சுலபமான வழியையும்; செல்வச் செழிப்பையும் வாக்களிப்பதில்லை. ஆனால் எல்லா சோதனையையும் சகிக்கத்தக்கதான கிருபையை வாக்களிக்கிறார். நாம் அந்த கிருபையைதான் நோக்கியிருக்கிறோம். 26ஆபிரகாம் அவனுடைய கால்நடைகளுக்குப் போதுமான புல் அந்த மலை உச்சியிலே இல்லாமல் இருந்தபோதிலும் தேவனுடைய வழியையே தெரிந்து கொண் டு; அங்கேயே தரிந்திருந்தான். ஆனால் லோத்தோ, இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை நம்பாமல் உலகத்திற்கு திரும்பின பின்மாற்றமடைந்த சபைக்கு அடையாளமாய் இருக்கிறான். இவைகளெல்லாம் தேவன் கிரியை செய்யக் கூடிய சந்திப்பு வருமட்டுமாக நடந்தது. அதற்கான நேரம் ஒன்று உண்டு. ஏனெனில் ஆபிரகாம் அந்த தேசத்திற்கு சுதந்தரவாளியாயிருக்கிறான். ஓ தேவனே, ஏன் கிறிஸ்தவர்களால் இதைப் பார்க்க முடியவில்லை? “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனை தரிசிப்பார்கள், சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்” என்று எழுதியிருக்கிறதே. ஓ காலத்தின் சந்திப்பு மிக சமீபமாய் இருக்கிறது. நாம் காலத்தின் முடிவில் இருக்கிறோம் என்பதை நம்முடைய பிதா தாமே நமக்கு காண்பிப்பாராக. புரிகிறதா? 27அந்த அதிசயமானவர்! இயற்கைக்கு மேம்பட்டவர்! சர்வ வல்லமையுள்ளவர்! இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அவரை நோக்கிப் பாருங்கள். ஆபிரகாமின் நாட்களிலே, சரியாக, அந்தக் காலம் முடிவுக்கு வருமுன்னர், உலகத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்; அதாவது அந்த பெரிய பட்டணமாகிய சோதோமிலே என்ன நடந்தது என்று பாருங்கள். ஆபிரகாம் ஒரு கூடாரத்திலே வாழ்ந்து வந்தான். அவன் எல்லாவற்றிற்கும் சுதந்திரவாளியாய் இருந்தும் ஒரு சிறு கூடாரத்திலே ஜீவித்தான். ஆகவே “அது கூடாரமோ, கொட்டகையோ, நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று ஒரு கவிஞன் பாடினது ஆச்சரியத்திற்குரியதாய் இல்லை. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் எல்லாவற்றிற்கும் சுதந்திரவாளியாய் இருக்கிறீர்கள். ஏனெனில் தேவன் அவனுக்கு பூமியை கொடுத்திருக்கிறார். அதற்கு அவரே ராஜாவாய் இருக்கிறார். ஆகவே சந்திப்பின் நேரத்திலே நாம் அவருக்குள் இருந்து சர்வ வல்லமை மற்றும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் எல்லாவற்றிற்கும் சுதந்திரவாளியாய் இருக்கிறோம். இப்பொழுது இந்த காரியத்தை சற்று உன்னிப்பாய் கவனியுங்கள். நாம் தொடர்ந்து இதற்குள் சென்று அந்தக் காலம் முடிவுக்கு வருமுன்னர் தேவன் எவ்வாறு செய்தார் என்பதை கவனியுங்கள். லோத்து சோதோமிலே வாழ்ந்து வந்தான். முறைகேடான காரியங்கள் அங்கு அதிகரித்துக் கொண்டேயிருந்தது. மனிதர்கள் ஓரின புணர்ச்சிக்காரர்களாக மாறி மிகவும் தாறுமாறாய்ப் போனார்கள். மனிதனின் இயற்கையான முறையை மாற்றி தாறுமாறாக்கினார்கள். இன்றைக்கு இருக்கின்ற உலகத்தையும் கவனித்துப் பாருங்கள். ஒரு தாறுமாறான காலமாய், எல்லா காரியங்களும் முறைகேடாய் மாறிக் கொண்டிருக்கிறது. 28மனிதனுக்கு மத போதனைகளைக் கற்பிக்கும் மிகப் பெரிய இடங்களும் பள்ளிகளும் தாறுமாறாக இருக்கின்றன. நான் அதைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது என்று நன்றாக அறிந்திருக்கிறேன். அங்கு ஆண்கள் ஸ்திரீகளை திருமணம் செய்யும்படி அனுமதிக்கப்படுவதில்லை. அது மிகவும் மோசமான காரியம். அந்த பள்ளிகளில் மற்றும் இன்றைய நவீன சபைகளில் நடக்கின்ற காரியங்கள் மிக மோசமானதாக இருக்கின்றது. ஆண்கள் குடித்து, புகை பிடித்து, உணர்ச்சிகள் கிளர்ச்சியூட்டப்பட்டவர்களாய் இளம் பெண்களை கெடுத்துப் போட்டபடியினால் அவர்களுடைய அசலான ஜீவியம் தாறுமாறாக்கப்பட்டதாய் இருக்கிறது. தேவன் அவர்களை அழிவுக்கு நேராக ஒப்புக் கொடுத்தார். ஆண் பெண் என்ற மனிதனின் இயற்கையான உடலுறவு முறையானது அவர்களுக்கு இல்லாமல் போகும் அளவிற்கு அவர்களுடைய ஜீவியம் கலப்படமாகிவிட்டது. பிசாசு அவர்களை அவ்வளவாகப் பிடித்துக் கொண்டான். சோதோம், கொமோரா சந்திப்பிற்கு வந்தபோது என்ன நடந்தது என்று கவனியுங்கள். நோவாவின் காலமும் சந்திப்பிற்கு வந்தபோது என்ன நடந்தது என்று கவனியுங்கள். அவர்கள் பெண் கொண்டும், பெண் கொடுத்தும் இருந்தார்கள். உங்களால் அந்த வழிகாட்டும் பலகையை பார்க்க முடிகிறதா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்). அங்கே என்ன நடந்தது என்று பார்க்க முடிகிறதா? அந்தக் காலமானது முடிவுக்கு வருமுன்னர், தேவன் தன்னுடைய தீர்க்கதரிசியை பூமியிலே கொண்டிருந்தார். இதோ இந்த காரியத்தை கவனியுங்கள். எப்பொழுதுமே ஒரு காலம் முடிவுக்கு வருமுன்னர், சாத்தான் அவனுடைய ஆள் மாறாட்டக்காரர்களை அவிழ்த்துவிடுகிறான். தேவனும் தன்னுடைய தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். மேலும் இந்தக் கடைசிக் காலத்திலே உங்கள் வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள், “என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும்” என்று வேதத்திலே போதிக்கப்பட்டிருக்கிறோம். தீர்க்கதரிசிகள் மறுபடியும் பூமியிலே தோன்றுவார்கள் என்றும் ஞானதிருஷ்டிக்காரர்கள் கடைசி காலத்திலே தோன்றுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாம் சரியாக அங்கு தான் இருக்கிறோம். நாம் சந்திப்பிலே இருக்கிறோம். 29இந்த கடைசி நாட்களிலே தேவன் என்ன செய்வார் என்றும், எவ்விதமாக அவருடைய ஆசீர்வாதங்கள் இருக்கும் என்றும், பிசாசினுடைய செயல்கள் எவ்விதமாக இருக்கும் என்றும், என்ன விதமான காரியங்கள் நடைபெறும் என்றும் தேவனுடைய தீர்க்கதரிசிகளால் காலங்களினூடாக தீர்க்க தரிசனமாயும் அவருடைய பரிசுத்த வார்த்தையினாலேயும் முன் உரைக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய பரிசுத்தமானது இந்த உலகத்தின் பொல்லாங்கை பொறுத்துக் கொள்ளாது. ஆனால் அவர் அதை சந்திப்பிற்கு கொண்டு வரும் முன், எச்சரிப்பின் அபாய ஒலியை அனுப்புகிறார். அதுமட்டுமல்ல, தேவன் சோதோம், கொமோராவை அழிப்பதற்கு முன் அவர் தேவ துாதர்களையும் பூமியில் அனுப்பினார். அவர்கள் மனிதர்களிடையே கலந்திருந்தார்கள். அதேபோல், இந்த காலம் முடிவுக்கு வருகிறதற்கு முன்பாகவும் தேவன் தூதர்களை அனுப்புவேன் என்று வாக்குறைத்திருக்கிறார். அவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய செய்தியோடு வருகின்றனர். 30இதுவே சந்திப்பின் நேரமாய் இருக்கிறது. என்னுடைய சிறு வயது முதல் என்னோடு பேசின அந்த சர்வ வல்லவரை ஏறக்குறைய மூன்று வாரத்திற்கு முன்பாக அங்கே நிற்கக் கண்டேன். நான் ஒரு மத வெறியன் அல்ல என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் இது வேத வாக்கியங்கள் நிறைவேறும்படி இப்படி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சத்தியத்தையும், நாம் எங்கிருக்கிறோம் என்ற அடையாளத்தையும் இந்த சபை அறிந்து கொள்ளவேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில், அப்பொழுது மாத்திரமே நீங்கள் சோம்பேறியாய் இல்லாமல் உற்சாகமுள்ளவர்களாயும், வேற்றுமைகள் இல்லாமலும் இருப்பீர்கள். அப்பொழுது மாத்திரமே ஒரு உண்மையான தேவ பக்தியுள்ள புருஷனாகவும், ஸ்திரீயாகவும் நடப்பீர்கள் உங்களுடைய இருதயம் கிறிஸ்துவின் மேல் சார்ந்திருக்கும். ஆகையால் இந்த உலகத்திலுள்ள அற்பமான காரியங்களிலே கவனம் செலுத்த வேண்டாம். ஏனென்றால் இந்த சண்டைகள், யுத்தங்கள், கலவரங்கள் மற்றும் அது போன்றவைகளெல்லாம் சாத்தானுடையதாய் இருக்கிறது. அதிலிருந்து விலகி இருங்கள். நாம் இப்போது முடிவில் இருக்கிறோம். இந்த காரியங்களை நீங்கள் சரி செய்வதற்கு இன்னொரு வாரம் இல்லாமல் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொண்டிருங்கள். இருக்குமா என்பதை நான் அறியேன், தேவன் ஒருவர் மாத்திரமே அறிவார். நாம் சரியாக முடிவில் இருக்கிறோம். 31இவ்விதமாய்த் தான் நோவா அவனுடைய காலத்திலேயும் இஸ்ரவேலர் அவர்களுடைய காலத்திலேயும் இருந்தது. இப்பொழுது ஆபிரகாமை அடுத்த சந்திப்பிலே பார்க்கிறோம். அவன் இயற்கையான (சாதாரன மனிதனாகவும்) மற்றும் இயற்கைக்கு மேம்பட்ட காரியத்திற்கும் நடுவிலே இருந்தான். அங்கே தேவ தூதர்கள் இறங்கி வந்தனர். அவர்கள் பார்ப்பதற்கு மனிதர்கள் போல் தோற்றமளித்தனர். மகிமை! அவர்கள் தீர்க்கதரிசியான ஆபிரகாமண்டை நின்று, “ஆபிரகாமே, தேவன் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களைச் செய்யப் போகிறார். இதோ உற்பவ காலத்தின்படி அடுத்த வருடம் இதே சமயத்தில் நான் உன்னை சந்திப்பேன், அப்போது உன்னுடைய மனைவி நூறு வயதாய் இருப்பாள், நீ ஒரு குழந்தையை பெற்றெடுப்பாய். நான் என்னுடைய தெய்வீக சுகமளித்தலின் வல்லமையை காண்பிப்பேன். நான் உன்னை மாற்றி மீண்டும் உன்னை ஒரு வாலிபனைப் போலாக்குவேன். நான் சாராளை மாற்றி அவளை புதிதாக்குவேன். நான் அவளை மறுபடியும் வாலிப ஸ்திரீயாக்குவேன். ஏனெனில் நான் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்பவர். நான் சர்வ வல்லவர். நான் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்வேன்'' என்றார். ஆமென். ”நான் என்னுடைய வல்லமையை காண்பிப்பேன். ஆபிரகாமே, நாம் சந்திப்பின் நேரத்தில் இருக்கிறோம்“. அசுத்த ஆவிகள் சோதோமில் இருக்கின்றது. அது சரிதான். அங்கே அவைகள் அந்த உலகத்திலே கிரியை செய்து கொண்டிருக்கிறது என்றார். அவைகள் இன்றும் இங்கே கிரியை செய்து கொண்டிருக்கின்றன. வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலே கூத்து, கும்மாளம், கவர்ச்சி, மற்றும் அசுத்தமான நகைசுவைகளை கொஞ்சம் கூட கட்டுப்படுத்தாமல் வெளிப்படையாய் பேசி இவ்விதமாய் அசுத்தமான காரியங்களை ஒளிபரப்பச் செய்கிறார்கள். சில நேரங்களிலே பொழுது போக்கிற்காக சுவிசேஷத்தையும் பரிசுத்த குலைச்சலாக்குகின்றனர். உலகம் முழுவதும் தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலகம் தாறுமாறாக்கப்பட்டிருக்கிற அதே சமயத்திலே, விசுவாசிகள் சர்வ வல்லமையின் பிரட்தியட்சத்தினாலும், அவருடைய கிரியைகளினாலும், அவருடைய வல்லமையினாலே கர்த்தருக்குள் மனந்திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தேவன், இவ்விதமாக தன்னுடைய இரக்கத்தினாலே இந்த காரியங்களை எல்லாம் நமக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார். 32அந்த வயது முதிர்ந்த தீர்க்கதரிசி அந்த வறட்சியான பூமியிலே அவனுடைய கூடாரத்தில் இருந்தபோது “ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆகவே அது கூடாரமோ அல்லது குடிசையோ, அது அவனுக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. அவன் எதைக் குறித்தும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில், அவன் எல்லாவற்றிற்கும் வாரிசு தாரராய் இருந்தான். சகலமும் அவனுக்குச் சொந்தமானது என்று அறிந்திருந்தான். அதே போல் தான் விசுவாசியும் இன்று அறிந்தவனாய் இருக்கிறான். ஆகவே நாம் எதற்காக இந்த உலகத்திற்குரிய காரியத்தைக் குறித்து கவலைப்பட வேண்டும்? இதனிமித்தம் நான் சில கூட்டங்களை சில நாட்களுக்கு முன்பு தவிர்த்தேன். ஏனெனில் நான் மக்களை பிழிந்து காணிக்கைகளை எடுக்க விரும்பவில்லை. மக்கள் என்ன சொன்னாலும் அதை குறித்து எனக்கு கவலை இல்லை, ஏனெனில் தேவன் அவருக்கு தேவையானவைகளை எல்லாம் சந்திக்க போதுமானவராய் இருக்கிறார். ஆம் ஐயா. நான் இந்த உலகத்திலுள்ள மிகச் சிறந்த காரியங்களைக் கொண்டிருப்பதை காட்டிலும், மலிவான பிஸ்கட்டுகளைத் தின்று ஓடைத் தண்ணீரை குடித்து சுவிசேஷத்தை பிரசங்கிப்பேன். காரியங்கள் எப்படியிருந்தாலும் சரி, நம்மை அவருடைய கரத்தில் ஒப்புக் கொடுத்து, சர்வ வல்லமையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதே போதுமானது. அது சரி. இப்பொழுது அங்கே நடந்ததை கவனியுங்கள். ஆபிரகாம் அவனுடைய கூடாரத்தில் அமர்ந்திருந்தபோது, அவர் அவனோடு உரையாடினார் என்பதை பார்க்கிறோம். இந்த தூதர்களும் அவனுக்கு முன் தோன்றினார்கள். அதன் பின் அவர்கள் சோதோம் கொமோராவிற்கு கடந்து சென்றனர். மற்றும் அந்நாளிலே தேவன் அற்புதங்கள் செய்ததை பார்க்கிறோம். அவர் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து; அந்த பட்டணம் முழுவதையும் சுட்டெரித்து; அந்த நிலத்தை சுத்தம் செய்து; எல்லாவற்றையும் ஆபிரகாமுக்குக் கொடுத்தார். லோத்தின் மனைவி பின்னாகத் திரும்பி பார்த்ததினால் உப்பு தூனாக மாறி அவமானத்தின் நினைவு சின்னமானாள். அவள் அந்த சோதோம் கொமோரா பட்டணத்தின் சமுதாயங்களிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்திரீயாய் இருந்தாள். தேவன் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் கொண்டு அற்புதத்தை நிகழ்த்தினபோது அனைத்து பள்ளத்தாக்குகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது. 33ஓ, அது என்னே! ஒரு மகத்தான நேரம்! ஜீவிப்பதற்கு அது மிகவும் மகத்துவமான நேரமாய் இருந்தது. ஏனெனில் அது தேவனுடைய சர்வ வல்லமையின் நேரம். இப்பொழுது, மறுபடியும் ஒரு சந்திப்பானது வருகிறதைப் பார்க்கிறோம். (நேரம் குறைவாயிருக்கிறது; ஆகவே நான் துரிதப்பட வேண்டும் என நினைக்கிறேன்.) அங்கே சர்வ வல்லமையின் பிரசன்னம் மீண்டுமாய் ஒரு விசை வந்தது. ஆகாப் என்றொரு மனிதன் யேசபேல் என்னும் பெயர் கொண்ட ஸ்திரீயை திருமணம் செய்திருந்தான். அவன் தொடக்கத்திலே ஒரு விசுவாசியாய் இருந்தான். பிறப்பிலே யூதனாக இருந்த அவன், நியாயப்பிரமாணத்தின்படி எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்பட்டான். யெகோவா தேவனை விசுவாசிக்கத்தக்கதாக ஒரு பக்தி வைராக்கியமான வீட்டிலே அவன் வளர்க்கப்பட்டிருந்தும், விக்கிரக ஆராதனை செய்கிற ஒருவளோடு காதலிலே விழுந்தான். அவள் கவர்ந்திழுக்கும் ஒளிரும் கண்கள் கொண்டவளாய் இருந்தாள். அது சரியே. அதே போல் தான் இன்றைக்கும், அருமையான கிறிஸ்தவ சகோதரர்களுடைய இருதயமும் கிறிஸ்து இயேசுவுக்குள் நிலையாய் இல்லாததனாலே இப்படிப்பட்ட தான கவர்ச்சியினால் கவர்ந்து இழுக்கப்பட்டு முட்டாள்தனமாக விழுந்து விடுகின்றனர். ஆம் அது சரிதான். நாம் ஜீவிக்கின்ற இந்நாள் மிக மோசமானதாய் இருக்கிறது. அது மிகவும் மோசமான நேரம். அதினுடைய அடையாள பலகை நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. 34ஆனால், தேவன், தான் யார் என்பதை நிரூபிக்கும்படியான பலப்பரீட்சையை கொண்டு வருவதற்கு முன்பாக, அவர் எலியா என்ற பெயர் கொண்ட ஒரு தீர்க்கதரிசியை அந்த தேசத்திலே கொண்டிருக்க வேண்டிய நேரம் ஒன்று இருந்தது. அவன் தேவனுடைய செய்தியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இருந்தான். அவன் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை நடப்பித்து அந்த சர்வ வல்லமையானது இன்னும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்தான். அந்த தீர்க்கதரிசி அங்கே வானங்களை அடைத்துப் போட்டான். அதினிமித்தம் அவனுடைய ஊழியத்தின் நாட்கள் முழுவதுமாய் மழை பெய்யாமல் இருந்தது. பிறகு அவன் வானத்திலிருந்து மழையை பூமியின் மீது வரப்பண்ணினான். அந்நேரத்திலே தூதர்கள் காட்சியிலே தோன்றினார்கள். அவர்கள் அவனுக்கு சோளத்தினால் உண்டான அப்பத்தை செய்து கொடுத்தனர். தேவனோடு அவன் நாற்பது நாள் வனாந்திரத்திலே இருக்குமளவும் அது அவனை உயிரோடே வைத்திருந்தது. அல்லேலூயா! காலத்தின் முடிவிலே தூதர்கள் தோன்றுவார்கள். தேவ தூதர்கள் இந்நாளிலே தோன்றுவார்கள் என்றும் தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் என்றும் அற்புதங்களும் அதிசயங்களும் நடக்கும் என்றும் தீர்க்கதரிசிகள் யாவரும் சுட்டிக் காட்டினார்கள். அடையாள பலகைகளும் சுட்டிக் காட்டினது. தேவன் அந்த சிறிய சந்திப்புகளிலே அப்பேற்பட்ட காரியத்தை செய்திருப்பார் என்றால், முழு பாதாளமும் திறந்து விடப்பட்ட இந்நாளிலே அவர் எப்பேற்பட்ட காரியத்தை செய்ய வேண்டியதாய் இருக்கிறது? முழு பரலோகம் திறந்திருக்கிறது, தேவ தூதர்கள் தோன்றுகிறார்கள், அற்புதங்களும் அடையாளங்களும் பூமியிலே நடந்து கொண்டிருக்கிறது. போலியான காரியங்களும் எழும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் எது உண்மை எது போலி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஆமென். 35ஓ, நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசிக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களை திட்ட வேண்டும் என்று எண்ணம் கொள்ளவில்லை. ஆனால் இந்த நாள் எப்பேற்பட்டது என்று நினைக்கும் போது, இந்த காரியம் என்னுடைய ஆத்துமாவை கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. தேவன் அவர்களுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக, அவர் எல்லாவிதமான அற்புத அடையாளங்களையும் செய்து முடித்திருந்தார். அவர்கள் இந்த தீர்க்கதரிசியை வலுக்கட்டாயமாக பிடித்து வரும்படி ஒரு கூட்ட மக்களை மேலே அனுப்பினார்கள். அதற்கு எலியா, “நான் தேவனுடைய மனுஷனாக இருப்பேனேயானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கட்டும்” என்று சொன்னான். ஒவ்வொரு முறையும் அக்கினி எப்படி வருகிறது என்று கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் தீர்க்கதரிசிகள் எப்படி வருகிறார்கள் என்று கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் எப்படி நடப்பிக்கப்படுகிறது என்று கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் தேவன் வல்லமையினாலும் சுகமளித்தலினாலும் எப்படி தன்னை நிரூபித்து காண்பிக்கிறார் என்று கவனித்துப் பாருங்கள். இவைகள் எல்லாம் சரியாக சாலைகள் சந்திக்கும் நேரத்திலே நடக்கிறது. ஒருபோதும் அதற்கு முன்பாக அல்ல, சரியாக சாலைகளின் சந்திப்பிலே; யுகத்தின் மாற்றத்திலே; காலத்தின் மாறுதலிலே நடக்கிறது. 36இப்பொழுது, முடிப்பதற்கு முன்பாக சில காரியங்கள் இருக்கிறது. இதை ஒரு நிமிடம் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நாம் ஐந்தாவது மகா சந்திப்பிற்கு போகலாம். இது தான் இருக்கிறதிலே மிக முக்கியமான ஒரு சந்திப்பு. ஏனென்றால் ஐந்து என்பது இயேசு (J-E-S-U-S) என்பதைக் குறிக்கிறது. ஆமென். அது தாமே பாவத்தை குறித்ததான கேள்விக்கு முற்றிலும் தீர்வளிக்கக் கூடிய நேரமாய் இருந்தது. அது தாமே இயற்கைக்கு மேம்பட்டவர் தம்மை முழுமையாகப் புரிந்துக் கொள்ளச் செய்யும் படியான நேரமாக இருந்தது. அதுதாமே மனிதர்களுடைய இருதயம் முழுமையாய் மாற வேண்டிய நேரமாய் இருந்தது. ஏனெனில் நியாயபிரமாணத்தினாலும் நியாயதிபதிகளாலும் மற்றும் எவராலும் அதை எடுத்துப் போடமுடியாமல் இருந்தது. ஆட்டுக் கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தினால் அதை எடுத்துப் போட முடியவில்லை. அந்த மகத்தான சந்திப்பு வருமுன்னர், அங்கேயிருந்த பிரசங்கிகள் மத்தியில் பிசாசானவன் எழுந்து, “அற்புதங்களின் நாட்கள் கடந்துபோனது, அப்படியொரு காரியம் இப்பொழுது இல்லை” என்று பிரசங்கித்திருந்தான். ஆனால் அதே நேரத்திலே, தேவன் தூதர்களை பூமியின் மேல் அனுப்பியிருந்தார். வீட்டை ஒழுங்கிலே வைத்திருந்த வயதானவர் ஒருவர் அங்கே இருந்தார். அவருடைய பெயர் சகரியா. அவர் எப்பொழுதும் ஜெபிக்கிறவராயிருந்தார். ஒரு நாளிலே அவர் பலிபீடத்தண்டை தூபங்காட்டிக் கொண்டு, மக்களுக்காக பரிந்துரை செய்துக் கொண்டிருந்தபோது அவருடைய வலது பக்கத்திலே ஒரு மகத்தான தூதன் தோன்றி, அந்த சந்திப்பின் நேரம் சமீபமாய் இருக்கிறது என்று நிரூபித்துக் கொண்டிருந்தான். அவர் தன்னுடைய வயது மூப்படைந்த மனைவியின் மூலம் ஒரு குமாரனை பெறுவார் என்றும் அவனுடைய பெயர் யோவான் என்றும் அவரிடம் கூறினான். 37யோவான், இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை நிரூபித்து காண்பித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். வேதத்திலே, “யோவானைப் போல் ஒரு மனிதனும் அந்த காலம் வரும் வரை பூமியிலே பிறக்கவில்லை” என்று இயேசுவே கூறியுள்ளார். அல்லேலூயா! ஏன் தெரியுமா? அது வரை இருந்ததிலேயே அவன் தான் மகத்தான தீர்க்கதரிசி. சாத்தானை தேவன் சந்தித்ததில் அதுதான் மகத்தான சந்திப்பாக இருந்தது. அவர்களுடைய பாதைகள் குறுக்கிட்ட போது, அவர் அவனை (சாத்தானை) ஒன்றுமில்லாமல் ஆக்கி அவனிடமிருந்து எல்லாவற்றையும் உரிந்து போடுகிற மற்றும் கொள்ளையடிக்கிற நேரமாய் இருந்தது. அல்லேலூயா! யோவான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அந்த சந்திப்பின் நேரத்திலே காபிரியேல் தூதன் தோன்றினான். தேவனுக்கே மகிமை! இது நடப்பதற்கு முப்பத்திமூன்று வருடத்திற்கு முன்பாகவே, இந்த சந்திப்பானது சமீபமாயிருக்கிறது என்று தேவன் அவர்களை முன்னெச்சரிக்கும்படி அநேக முறை முயற்சித்தார். அங்கே அவிசுவாசிகள் மிகவும் மோசமாகிக் கொண்டும், முடக்கியும், அதனுடன் தர்க்கித்தும், அதிலிருந்து விலகியிருக்கும்படியும் எத்தனித்தார்கள். கடைசியிலே, அதை அறிவிக்கும்படி அனுப்பப்பட்ட யாவரையும் கொன்று போட்டார்கள். ஆனால் தேவன் எப்படியாக இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை நிகழ்த்தும் படி திட்டமிட்டாரோ அப்படியே செய்தார். ஏனென்றால் அவர் சர்வ வல்லவர். அவர் அதை செய்தாக வேண்டும். அவர் தேவன். 38இப்பொழுது நாம் தொடர்ந்து அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். இந்தக் காட்சியில் நாம் தொடர்ந்து பார்ப்போமானால், அங்கே யோவான், நதியணடையிலே பிரசங்கித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். அங்கே அவன், தன்னைக் காட்டிலும் வல்லமையுள்ளவர் ஒருவர் வருகிறார் என்பதைக் குறித்து அறிவித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து சர்வ வல்லவரே அங்கு காணப்பட்டார். அவர் ஒரு மாம்ச சரீரத்தில் மறைந்திருந்தார். மகத்தான யெகோவா தேவன் தாமே அவருடைய குமாரனாம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்து வெளிப்பட்டார். அந்த சர்வ வல்லமையானது மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்து, நம்மோடு நடந்தது. அல்லேலூயா! ஓ, அவர் கலிலேயா கடலிலே நடந்தார். ஒரு இரவிலே அவர் படகில் படுத்துக் கொண்டிருந்தபோது, அந்த சின்ன படகானது அலைக் கழிக்கப்பட்டது. ஆனால் அவரோ அதைக் கவனிக்காதவர் போல் நடந்து கொண்டார். அவர் மிகவும் களைப்பாயிருந்தார். ஆனால் அது சந்திப்பின் நேரமாக இருந்ததினால், அங்கே ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும். ஆகவே, அவர் அந்த படகின் மேல் தன் காலை வைத்து, மேலே பார்த்து, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். நான் உங்களுக்கு இதைச் சொல்லட்டும், வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டிகர் அந்த படகிலிருக்கும் போது, இயற்கையானது அவருக்குக் கீழ்படிந்தாக வேண்டும். சர்வ வல்லவர் பேசும் போது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெறும். ஆமென். 39ஒரு நாளிலே, தன் சரீரம் முழுவதும் குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு குஷ்டரோகி அவரிடம் வந்து, “ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்'' என்றான். அதற்கு அவர், அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, சொஸ்தமாகு” என்றார். சர்வ வல்லமை பேசும் போது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடக்கும். அல்லேலூயா! சூரியன் மேகங்களின் பின்னாக இருந்து எப்படி வெளி வருகிறதோ, அதேபோல் அவனுடைய குஷ்டரோகம் அவனை விட்டு காணாமல் போயிற்று. நிச்சயமாக சர்வ வல்லவர் பேசும் போது அப்படி நடக்கும். அவர் மறுபடியும் இந்த கடைசி நாட்களிலே பேசுவார் என்று வாக்களித்திருக்கிறார். சர்வ வல்லமை பேசும் பொழுது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் நடைபெறும். ஆம் ஐயா. கவனியுங்கள், அவர் நோயாளிகளை குணப்படுத்தினார். மரித்தோரை உயிரோடு எழுப்பினார். குருடர்களின் கண்களைத் திறந்தார். அது எதைக் காட்டினது என்றால் அந்த சந்திப்பு வந்துவிட்டது என்று மக்களுக்கு நிரூபித்துக் காட்டினது. “என்னுடைய ஜீவனை விடவும் மறுபடியும் அதை எடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. எந்த ஒரு மனுஷனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்திட முடியாது” என்றார். 40ஒரு நாளிலே, (யோவான் 17 ஆம் அதிகாரத்தில்) அவர் மேலே நோக்கி, “பிதாவே, என் வேளை வந்தது” என்றார். அல்லேலூயா! அவர், “அந்த சந்திப்பு வந்துவிட்டது, எல்லா காரியமும் முடிவு பெற்றிருக்கிறது, எல்லாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது, சாலை சந்திப்பு வந்து இருக்கிறது, உலகமானது எச்சரிக்கப்பட்டிருக்கிறது, நான் அப்போஸ்தலர்களை அபிஷேகம் செய்திருக்கிறேன். அவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்தார்கள். நாங்கள் இந்த தேசம் முழுவதும் கடந்து சென்றுள்ளோம், எல்லா இடங்களிலும் அறிவித்துள்ளோம். அந்த நேரம் இதுவே. அந்த நேரமானது வந்திருக்கிறது” என்றார். சகோதரனே, இந்த காலை வேளையிலே, ஒரு சுவிசேஷ பிரசங்கியாக, நான் விசுவாசிக்கிறது என்னவெனில், இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் மாம்ச உதடுகளின் மூலமாய் அதாவது அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் மூலமாய் “அந்த நேரம் வந்துவிட்டது. இது தான் அந்த நேரம்” என்று உரைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் வந்தாகிவிட்டது. சர்வ வல்லமை பதிலளித்துக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவைகள் நடந்தாக வேண்டும். ஏனெனில் நாம் சந்திப்பில் இருக்கிறோம். 41சர்வ வல்லமையுள்ள தேவன் அங்கே மாம்சத்தில் வெளிப்பட்டு இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் எல்லாவற்றையும் செய்தார். அங்கே ரோம நூற்றுக்கதிபதி, “ஆண்டவரே நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என்றான். அவனுடைய வேலைக்காரன் பிழைப்பான் என்று அவன் நன்றாக அறிந்திருந்தான். அவன் ஒரு அதிகாரமுள்ள மனிதனாக இருந்தான். அவனுக்கு கீழ்பட்டிருக்கும் யாதொன்றும் அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படியும் என்றும் அவன் எதைச் சொன்னாலும் அவர்கள் அதை செய்தாக வேண்டும் என்றும் அறிந்திருந்தான். “நான் ஒருவனை போவென்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், நான் ஒரு அதிகாரத்துக்கு கீழ்பட்டவனாயிருக்கிறேன், என் அதிகாரத்திற்குட்பட்டிருக்கும் யாவும் எனக்கு கீழ்படிந்திருக்கிறது. ஆனால் ஆண்டவரே, நீர் என்னுடைய வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரனல்ல. நீர் ஒரு வார்த்தையை மாத்திரம் சொன்னால் போதும்” என்றான். அல்லேலூயா!அவன் அது சர்வ வல்லமை என்று அறிந்திருந்தான். சர்வ வல்லமை பேசினால் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் நடக்கும் என்று அறிந்திருந்தான். ஓ, தேவனே. ஒரு நாளிலே அவர் லாசருவின் கல்லறையண்டையில் நின்று, ஒரு சாதரன மனிதனைப் போல் அழுது கொண்டிருந்தார். அப்பொழுது மார்த்தாள், “ஆண்டவரே, நீர் மாத்திரம் இங்கே இருந்திருப்பீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனால், சர்வ வல்லமை இப்பொழுது பேசினாலும் கூட அவன் பிழைப்பான், ஏனெனில் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுகிறதெதுவோ, அதை உமக்குத் தருவார். நீர் என்ன சொன்னாலும் அவர் அதை செய்கிறவராய் இருக்கிறார்” என்றாள். 42அவர் அப்படியாக கல்லறையண்டைக்கு கடந்து சென்றார். கவனியுங்கள், சர்வ வல்லமை நம் மத்தியிலே பிரத்தியட்சயமாகி, நம்மோடு ஜீவித்தது. “தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தமக்குள் ஒப்புரவாக்கினார். அவர் நம்மோடு ஜீவித்து தம்முடைய குமாரனாம் இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவரே சர்வ வல்லவரும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்கிறவராக இருந்தார். அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராய் இருக்கும் பட்சத்தில், ”நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடே கூட இருப்பேன்“ என்று கூறியிருக்க, நாம் எதற்காக மற்ற காரியங்களைக் குறித்து யோசிக்க வேண்டும்? அவர் பேசும் போது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் நடக்க! நாம் எதற்காக மற்ற காரியங்களைக் குறித்து எதிர் பார்க்கிறோம்? ஆகவே அவர் அழுதபடி கல்லறையண்டைக்கு போகிறதைப் பார்க்கிறோம். அதன் பின் சர்வ வல்லமையானது ஒருங்கிணைத்து அவர் பேசின போது, “லாசருவே, வெளியே வா” என்றார். அப்போது ஏற்கனவே அழுகிக் கொண்டிருந்த அந்த மனிதனுடைய மூக்கு முகத்திலிருந்து கீழே விழுந்து போயிருந்தது. அவன் மரித்து நான்கு நாட்களானது. தோல் புழுக்களும் வரத் துவங்கிவிட்டது. ஆனால் அழிவோ தன் எஜமானை அறிந்திருந்திருக்கிறது. அல்லேலூயா! அவர் மரித்த இந்த மனிதனுக்கு மீண்டுமாய் அவனுடைய ஜீவனைக் கொடுத்தார். மரித்துப் போயிருந்த அவன் எழும்பி நின்று மீண்டுமாய் ஜீவித்தான். அது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம். “நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் அவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்று தேவன் கூறினார். 43சர்வ வல்லமை பேசினால் போதும். அப்பொழுது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் நடைபெறும். அவர் எப்பொழுதுமே அதை காலத்தின் சந்திப்பிலே செய்கிறார். ஆகவே இந்த காரியங்களெல்லாம் நடைபெறும் போது நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் நாம் காலத்தின் முடிவில் இருக்கிறோம். சர்வ வல்லமை பேசினபோது, மரித்த மனிதன் மரணத்திலிருந்து எழும்பி மீண்டுமாய் ஜீவித்தான். அவன் எழும்பி விருந்துக்குச் சென்று அவரோடு இராபோஜனம் அருந்தினான். ஓ! என்ன நடந்தது? ஓர் மகிமையான நாளிலே! ஒரு விசை பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்திருந்த நம்மிடத்தில் சர்வ வல்லமையானது பேசினது. நரகத்திற்குப் போய்க் கொண்டிருந்த நம்மிடத்தில், சர்வ வல்லமையானது பேசினது. நாம் பாதாளத்திலிருந்து எழுப்பப்பட்டு மகிமைக்கேறினோம். ஒரு நாளிலே, ஓ கடைசி நாளில், அந்த இராபோஜன விருந்தை நாம் புசிப்போம். சர்வ வல்லமையானது இன்னும் பேசுகிறதாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையே சர்வ வல்லமை. நாம்அதை விசுவாசித்ததினால், நாம் மரணத்திலிருந்து நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம். “என்னுடைய வார்த்தையைக் கேட்டு என்னை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்''. ஓ அவர் சர்வ வல்லமையுள்ளவர். நாம் இப்பொழுது நோவாவைப் போல பேழையைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாளிலே இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெறும்; எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும். அப்போது இயேசு வருவார். நாம் சரியாக இப்போது காலத்தின் சந்திப்பிலே இருக்கிறோம். ஆகவே இந்த காரியங்கள் நடைபெறுகிறதை நீங்கள் பார்க்கும் போது, உங்கள் தலையை உயர்த்தி, உங்களுடைய மீட்பு சமீபமாயிருக்கிறது என்று அறிந்துக் கொள்ளுங்கள். சர்வ வல்லமை பேசும் போது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதம் நடந்தேறும். “பிதாவே, நாங்கள் சந்திப்பிலே இருக்கிறோம். நீர் யார் என்பதை நான் நிரூபித்தாக வேண்டும்” என்று இயேசு கூறி மரித்தோரை உயிரோடெழுப்பினார் மற்றும் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். ஆனால் கடைசியாக அவர் கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்தபோது, அவர் தாழ்மையோடு சிலுவையண்டை நடந்து போய், அங்கே ஆணிகளால் அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டார். பரலோகம் அவரை ஏற்கவில்லை அவரை தள்ளினது. பூமியிலிருந்தும் அவர் தள்ளப்பட்டவராய் இருந்தார். 44அவர் செய்த அற்புத அடையாளங்களை இந்த பாவமுள்ள தேவ பக்தியில்லாத உலமானது கண்ட பிறகும், அவரை கேலி செய்து, பரிகாசம் செய்தது. தண்ணீரினால் வந்த நியாயத்தீர்ப்பு எப்படி நோவாவையும் அவனுடைய பேழையையும் உயர்த்தினதோ அப்படியே தேவனுடைய நியாயத்தீர்ப்பும் இயேசுவின் மேல் ஊற்றப்பட்டபோது அவர் உயர்த்தப்பட்டார். அவர் நமக்குப் பதிலாக மரித்து மேலே உயர்த்தப்பட்டார். நோவா பேழைக்குள் இளைப்பாறினதைப் போல் விசுவாசியும் அவருக்குள் இளைப்பாறுகிறான். ஆகவே நியாயத்தீர்ப்பு வந்தாலும், அது அவனுக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. உண்டு பண்ணுமா? நிச்சயமாக உண்டு பண்ணாது. சொல்ல போனால் மரணமே கூட தடையாகவோ, வலியாகவோ இராது. “ஓ மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” ஆகவே தான் கல்லறைத் தோட்டத்தைக் கடந்து போக எனக்குக் கொஞ்சமும் பயமில்லை. நான் தேவனுடைய துதிகளை சத்தமாய் பாடிக் கொண்டே போவேன். ஏனெனில் நான் அவருக்குள் என்றென்றுமாய் உயிரோடிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். அது உண்மை. இப்பொழுது சர்வ வல்லமையானது பேசினது. அது என்னுடைய இருதயத்தோடும் உங்களுடைய இருதயத்தோடும் பேசின போது அப்போது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெற்றது. ஒரு சமயம் ஒரு கோழையான பாவியாய் இருந்தீர்கள், ஒருவேளை குடிகாரனாக அல்லது புகை பிடிக்கிறவனாக அல்லது நடன களியாட்டங்களுக்கு ஓடுபவனாக இருந்து காலத்தை கழித்துக் கொண்ருந்திருக்கலாம். ஆனால் சர்வ வல்லமை உன்னோடு பேசினபோது, நீ அதை ஏற்றுக்கொண்டாய். அப்போது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெற்றது. அதன் பின் நீ மரணத்திலிருந்து நீங்கி ஜீவனுக்குட்பட்டாய். உன்னுடைய பாவத்தைவிட்டொழிந்தாய். சர்வ வல்லமை பேசினபோது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெற்றது. அது உண்மை. 45இப்பொழுது இந்த காலை வேளையில், இங்கு சபையில் இருக்கிறவர்களில் சிலர், சில வருடங்களுக்கு முன்னர் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு மரித்துக் கொண்டிருந்தீர்கள், ஒரு சிலர் முடமாயும், ஊனமாயும், சப்பானியாயும் மற்றும் விடாய்த்துப் போன நிலையிலும் இருந்தீர்கள். ஆனால் சர்வ வல்லமை பேசினபோது, இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெற்றது. அது நிச்சயமாகவே நடைபெற்றது. ஆகவே நாம் காலத்தின் சந்திப்பிலே இருக்கிறோம். அடையாளம் என்ன? நாம் சரியாக இப்பொழுது சாலை சந்திக்கும் சந்திப்பிலே இருக்கிறோம். நாம் சரியாக ஆயிரவருட அரசாட்சியில் பிரவேசிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் அவரை சிலுவையிலே அறைந்தபோது நாம் அவருக்குள்ளாக இருந்து மேலே உயர்த்தப்பட்டோம். அவர்கள் அவரை வானத்திற்கும் பூமிக்கும் மத்தியிலே தொங்கவிட்டார்கள். பரலோகத்தினால் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் இந்த உலகத்தின் பாவமானது அவர் மேல் இருந்தது. இந்த உலகமும் அவரை அவர்களுடைய ராஜாவாய் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அவர் மரிப்பதற்கும் இடமில்லாதிருந்தது. இந்த உலகத்தின் பாவம் அவர் மேல் இருந்தபடியால், அவர் பரத்திற்கு வர முடியாமலிருந்தது. அவர் இந்த பூமியிலே வெறுக்கப்பட்டும், இழிவாக்கப்பட்டும், துப்பப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டவருமாய் இருந்தார். ஆனால் அவரோ பரத்திற்கும் பூமிக்கும் மத்தியிலே நின்று, இரண்டையும் இணைத்து வழியை உண்டு பண்ணினார். ஆகவே மகிமைக்கு வர வாஞ்சிக்கும் எந்த ஒரு புருஷனும் ஸ்திரீயும் அவரின் (விலாவிலிருந்து) பக்கத்திலிருந்து புரண்டோடுகிற அந்த இரத்த பிரவாகத்தின் வழியாகத்தான் பிரவேசிக்க முடியும். ஓ, சர்வ வல்லமை எவ்வளவு மகத்தானதாயிருக்கிறது! 46அதன் பின் அங்கே என்ன நடந்தது? அற்புதங்களும் அடையாளங்களும் நடைபெற்றது. சந்திரன் கதறி அழ ஆரம்பித்தது. சூரியன் தன் கண்களை மூடிக் கொண்டு அழத் துவங்கினது. அதற்கு வலிப்பு உண்டாகிற அளவிற்கு அவ்வளவாக துயரத்திற்குள்ளாகி இரத்தம் சொட்டுகிறதைப் போல் மாறினது. நிச்சயமாக அப்படியே நடந்தது. ஏனெனில், இந்த பூமி வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரை புறக்கணித்ததையும், பாவத்தின் மிகுதியால் அவர் பரத்திற்குள் பிரவேசிக்க முடியாத நிலையையும் அவைகள் கண்டது. அவர் வானத்திற்கும் பூமிக்கும் நடுவிலே நின்று, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே ஒரு மத்தியஸ்தராக மரித்துக் கொண்டிருந்தார். சூரியனால் தாங்க முடியாமல், “நான் இனி பிரகாசிக்க மாட்டேன்” என்று சொல்லி தன்னை மறைத்துக் கொண்டது. நட்சத்திரங்களும், “என்னால் இதை பார்க்க முடியவில்லை'' என்றது. பூமியும், “என்னால் அதை தாங்க முடியவில்லை ” என்றது. பூமிக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகி அதற்குள் இருந்த கற்பாறைகளை கக்கினது. இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெற்றது. அது தாமே சாலையின் முடிவாய் இருந்தது. பாவமானது, சிலுவை வருமட்டுமாக ஆட்சி செய்தது. ஆனால் அதற்கான கிரயமானது அங்கே செலுத்தப்பட்டாயிற்று. ஓ, இது மிகவும் மகத்தானது! பூமியானது அங்கிருந்த பாறைகளை குன்றுகள் மேல்தூக்கி வீசுகிற அளவிற்கு அவ்வளவாக அதிர்ந்தது. மரித்தவர்கள் கல்லறையிலிருந்து எழும்புகிற அளவிற்கு அவ்வளவாக அதிர்ந்தது. பூமிக்கு நரம்பு தளர்ச்சி உண்டாயிற்று. சூரியனுக்கும் வலிப்பு உண்டாகி கடந்து போனது. இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடந்தேறியது (அல்லேலூயா). அது எப்பொழுதுமே சந்திப்பிலே நடக்கும். 47ஆகவே அங்கு நடந்த காரியங்கள் எல்லாம் அடுத்து வர இருக்கும் காலத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். உலகமானது ஆயிரத்து ஐநூறு வருடங்களாக இருண்ட காலத்திற்குள் பிரவேசித்தது. நமக்கு இன்னும் சற்று நேரம் இருந்தால் நலமாயிருக்கும். ஆனால் நமக்கு நேரம் குறைவாயிருக்கிறது. நான் சரியாக பன்னிரெண்டு மணிக்கு முடிக்க வேண்டும். இப்பொழுது அந்த இருண்ட காலத்திலே என்ன நடந்தது என்று பாருங்கள். வெஸ்லி மற்றும் லூத்தர் காலத்தில் நடந்ததைப் பார்க்க நமக்கு நேரம் இருந்தால் நலமாயிருக்கும். அது தானே ஆறாவது சந்திப்பு. அங்கே சபையானது, இருளிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டுமாய் சுவிசேஷத்தின் மகத்தான வெளிச்சத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அற்புதங்களும் அடையாளங்களும் நடந்தது. ஓ! தேவனே! எந்த மனிதனாலும் அங்கே நிற்க முடியவில்லை. தெய்வீக சுகமும், அற்புத அடையாளங்களும் அவ்வளவாக நடைபெற்றது. அதுதாமே அவருடைய பலிக்கும், அவருடைய இரண்டாம் வருகைக்கும் இடையே சம்பவித்த காரியம். அங்கே என்ன நடந்தது என்று கவனியுங்கள். ஜான் வெஸ்லி சுவிசேஷத்தை பிரசங்கித்த போது, அங்கே அவர் சபைகளாலும் மற்ற காரியங்களாலும் அடித்து துரத்தப்பட்டவராய் இருந்தார். மக்கள், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே மயங்கி கீழே விழுந்து, அவர்களுடைய முகத்திலே தண்ணீர் தெளித்து அவர்களை எழுப்புகிற அளவிற்கு என்ன நடந்ததென்று அறியாதவர்களாய் இருந்தார்கள். அங்கே அற்புதங்களும் அடையாளங்களும், அதிசயங்களும் சுகமளித்தலும் நடைபெற்றது. 48சகோதர சகோதரிகளே இதை கவனியுங்கள். இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியுமா? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நாம் ஆயிரவருட அரசாட்சிக்குள்ளாக கடந்து போகயிருக்கிறோம். எல்லா காரியங்களும் அதையே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நடு ஜாமத்தை எட்ட இன்னும் இரண்டு நிமிடங்கள் மாத்திரமே இருக்கிறதென்று அந்த பழைய கடிகாரம் காட்டிக் கொண்டிருக்கிறது. சர்வ வல்லமை பேசிக் கொண்டிருக்கிறது. தேவ தூதர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்களில் இருக்கும் மக்கள் மேல் தரிசனங்கள் ஊற்றப்படுகிறது. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. வியாதியஸ்தர்கள் எழுப்பப்படுகிறார்கள். குருடர்கள் பார்க்கிறார்கள். செவிடர்கள் கேட்கிறார்கள், பிசாசுகள் கொந்தளிக்கின்றன, மாய வித்தைக்காரர்களும், யந்நேயும், யம்பிரேயும் இருக்கிறார்கள்; சர்வ வல்லமையும் பேசிக்கொண்டிருக்கிறது. அல்லேலூயா. நாம் கடைசி நாட்களிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அந்த சந்திப்பிலே இருக்கிறோம். “தேசங்களிலே தத்தளிப்பும் இடுக்கண்ணும் உண்டாயிருக்கிறதினால் மனுஷனுடைய இருதயம் பயந்து விழுந்திருக்கிறது''. பூமிக்கு மிகவும் பதட்டம் உண்டானதினால் அது எல்லா இடங்களிலும் நில நடுக்கங்களை வெடிக்கிறது. அவ்விதமாகத் தான் இருக்கும் என இயேசு கூறியிருக்கிறார். அனேக இடங்களில் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும் என்றார். உங்களால் பார்க்க முடிகிறதா? தன் அழிவை பூமி அறிந்திருக்கிறது. அவள் மிகவும் பதட்டமாயிருக்கிறாள். உலகமும் பதட்டமாயிருக்கிறது. ஆனால் சபையோ சுவிசேஷத்தின் மேல் சார்ந்து இருக்கிறது. அதுவே அதின் பாதுகாப்பின் வழி. ”என்னிடத்தில் வருகிறவர்களை நான் ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை“ அல்லேலூயா. 49“ஒரு மனிதன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்''. நிச்சயமாக அந்த ராஜ்யத்திலே தேவனுடைய அங்கீகாரம் முத்திரையை நீங்கள் பெற்றிருப்பீர்கள்; அதாவது, பரிசுத்த ஆவியை உங்கள் இருதயத்திலே பெற்றிருப்பீர்கள். ஆகவே அலைகள் எப்பக்கத்தில் வீசினாலும் பரவாயில்லை. காலமானது மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. சர்வ வல்லமையும் எழும்பிக் கொண்டிருக்கிறது. பாவனையாளர்களும் அதைப் போல் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா காரியங்களும் இதைப் போலவே பாவனை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மேலும் வேதாகமமானது, அந்த கடைசி வல்லமையுள்ள பாவனையாளன் எழுந்து, ஏழு மலைகளின் மேலாக அமர்ந்திருப்பான் என்று கூறுகிறது. அவன் மூன்றடுக்கு கிரீடத்தை அணிந்திருப்பான், அது மட்டுமல்ல அவன் மக்களுக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியைக் கொண்டு வருகிற அளவிற்கு வல்லமையைக் கொண்டிருப்பான். அந்த வல்லமையை மக்களுக்குக் கொடுக்கவும் செய்வான். இவை எல்லாவற்றையும் அவன் கடைசிக் காலத்திலே செய்வான் என்று உரைத்திருக்கிறது. கவனியுங்கள், அவர்கள் மரித்தவர்களுடைய புண்ணிய ஸ்தலங்களிலே வணங்கி, எலும்புகளைத் தடவி, அது போன்று காரியங்களைச் செய்யும்படி அவ்வளவாக பாவனை செய்கிறார்கள். அவர்கள் அவ்விதம் எலும்புகளை தடவி, புண்ணிய ஸ்தலங்களிலே வணங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே சர்வ வல்லமை இங்கு பேசி இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களோ இதைக் கண்டு, “அவை எல்லாம் முட்டாள் தனமான காரியம்” என்கின்றனர். ஆனால் சபையோ வளர்ந்து கொண்டிருக்கிறது தேசம் முழுவதும் மகத்தான சுகமளிக்கும் எழுப்புதல் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அற்புதங்களும் அடையாளங்களும் எல்லா இடங்களலும் நடந்து கொண்டிருக்கின்றன. தேவ தூதர்களும் மக்கள் முன்பாக தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். அற்புதங்களும் அடையாளங்களும் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. 50நண்பனே இதெல்லாம் எதைக் காட்டுகிறது? நாம் காலத்தின் முடிவில் இருக்கிறோம், நாம் சந்திப்பில் இருக்கிறோம் என்று காட்டுகிறது. ஆகவே இது நடைபெறும்போது உங்கள் தலையை உயர்த்துங்கள். ஏனெனில் உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது என்றார். நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா? இது சந்திப்பின் நேரம். “மேலும் கடைசி நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன், உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள், நான் உங்களுக்கு வானத்தில் அதிசயங்களைக் காண்பிப்பேன்” என்று தீர்க்கதரிசிகள் வாக்குறைத்திருக்கின்றனர். இவ்விதமாக நடந்தேறும் என்று கர்த்தரும் கூறியிருக்கிறார். நீங்கள் பறக்கும் தட்டுகள் போன்றவற்றை காண்கிறீர்கள். மக்கள் மத்தியிலே தத்தளிப்பு உண்டாகும், பூமியும் அதிரும்“ என்று கூறப்பட்டிருக்கிறது. பாருங்கள், பெரிதான நில நடுக்கங்கள் வரப் போகின்றது. பெரிய எரிமலை வெடிப்புகள் உண்டாகும். தேசங்கள் மத்தியில் பதற்றமும் உண்டாகும். பெரிய தொல்லைகளும் உண்டாகும். தேசங்கள் கத்தியை தனக்குப் பின்னாக வைத்துக் கொண்டு சமாதானத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். எல்லா காரியங்களும், எவ்விடத்திலும் தொல்லைகள் சூழ்ந்திருக்கும். மனிதர்கள் இன்னும் மோசமாகிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ”வெள்ளம் போல் சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார்''. இது காலத்தின் சந்திப்பின் நேரம்! இதுவே சாலையின் முடிவு. பெரிய சுகமளிக்கும் கூட்டங்களினால் ஆப்பிரிக்கா முழங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் எங்கிலும் அற்புதங்களும் அடையாளங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் இது சந்திப்பின் நேரம் என்றும் காலத்தின் முடிவு என்றும் காட்டுகிறது. 51மேலும் குதிரைகள் இல்லாத வண்டிகள் பெருஞ் சாலைகளிலே நெருக்கமாய் போய்க் கொண்டிருக்கும் என்றும் அது போன்று அநேக வெவ்வேறு காரியங்கள் நடைபெறும் என்றும் கூறினார். “சீயோன் குமாரத்திகள் எப்படியாக உடையுடுத்தி நடப்பாள் என்றும்; ஓரின சேர்க்கைகாரரும் மற்றுமுள்ள காரியங்களும் எப்படி வெளிப்படும் என்றும்; எல்லாம் எப்படி தாறுமாறானதாய் இருக்கும் என்றும்; மனிதர்கள் எப்படி மிகவும் கொடிய வஞ்சகத்திற்குத் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களாய் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது போன்று அனேக காரியங்கள் நடக்கும் என்றார். அவர்கள் முரட்டுத்தனமுள்ளவர்களாயும், தலைக் கணமுடையவர்களாயும், தேவனைக் காட்டிலும் உலக சந்தோஷத்தை நேசிக்கிறவர்களாயும், சத்தியத்தை மீறுகிறவர்களாயும், பொய்யாய் குற்றம் சாட்டுகிறவர்களாயும் இருப்பார்கள் என்றார். ஆனால் என் அன்பு சகோதரனே, இந்நாள் ஒன்றில், இயேசு வருவார். அப்போது மத வெறியர்கள் என்று அழைக்கப்படுகிற இந்த பண்டைய கால கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தொடர்ந்து விசுவாசிக்கிறவர்களிடத்தில் சர்வ வல்லமையானது பேசும். அங்கே தானே இயற்கைக்கு மேம்பட்ட அற்புதமானது நடைபெறும். ஏனெனில், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் என் நாமத்தினால் பேய்களை துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள், சர்ப்பத்தை எடுப்பார்கள், அல்லது சாவுக் கேதுவானயாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கும்போது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறியிருக்கிறது. மேலும் ”இவைகளை நான் செய்த படியால் நீங்களும் செய்வீர்கள். நான் முடிவுபரியந்தம் உங்களுடனே கூட இருப்பேன். மற்றும் இவைகளெல்லாம் நடைபெறும்போது உங்கள் தலையை உயர்த்திப்பாருங்கள், உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது“ என்றார். 52பார்த்தீர்களா நண்பர்களே, சரியாக நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும். இஸ்ரவேல் விடுவிக்கப்பட்ட நாட்களிலும் அப்படியே நடந்தது. மனுஷ குமாரன் சிலுவையில் இருந்த நாட்களிலும் நடந்தது. அதே போல்தான் நாமும் சந்திப்பிலே இருக்கிறோம். தேவன் எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை சந்திப்பில் காண்பிக்கிறவராய் இருக்கிறார். அவர் மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறார். நோய்களை குணமாக்குகிறார், மரித்தவரை எழுப்புகிறார், பிசாசுகளை துரத்துகிறார், மகத்தான எழுப்புதலின் ஆவியைக் கொடுக்கிறார். வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள் தோன்றுகின்றன. தேசங்களிடையே பதற்றம் இருக்கின்றது. ஏனெனில் நாம் சரியாக காலத்தின் சந்திப்பில் இருக்கிறோம். அப்படியென்றால் அடுத்து நடக்க இருக்கும் காரியம் என்ன? கிறிஸ்துவுக்குள் மரித்தோரையும் மற்றும் கர்த்தருக்குள் ஜீவனுள்ளோரையும் அவருடைய மகிமைக்கு எடுத்துக் கொள்ளும்படி இயேசு கிறிஸ்து மறுபடியும் இரண்டாம் முறையாக வருவதே. அப்போது தேவன் ஒவ்வொருவரையும் அவருடன் அழைத்துக் கொண்டு போவார். சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். அதுவே மகத்தான ஆயிரவருட அரசாட்சியின் ஆரம்பம். அங்கே யுத்தங்கள் இராது. அவர்களுடைய ஆயுதங்களை ஓரமாக அடுக்கி வைத்து, பட்டயங்களை மண் வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள், தேசங்களுக்கு விரோதமாக தேசம் பட்டயம் எடுப்பதில்லை, நோய்களும் இராது, பிரச்சனைகளும் மன வருத்தங்களும் இராது. அங்கே நாம் என்றென்றுமாய் தேவனுடைய சமூகத்தில் ஜீவிப்போம். ஆகவே இந்த அடையாளங்கள் எல்லாம் நாம் சந்திப்பில் இருக்கிறோம் என்று காட்டுகிறது. நாம் சாலையின் முடிவில் இருக்கிறோம் என்று காட்டுகிறது. 53இன்று அந்த இளைப்பாறுதலின் புகலிடமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் என்ஆத்துமாவை நான் நங்கூரமிட்டிருக்கிறேன் என்று அறியும்போது நான் மிக சந்தோஷமடைகிறேன். தேவன் அவருடைய பரிசுத்த வார்த்தையின் மூலம் அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பிக்கிறதை பார்க்கும் போது நான் மிகுந்த சந்தோஷமடைகிறேன். அதை அறிந்தவனாய், இங்கிருக்கின்ற என்னுடைய சிறு சபைக்கு நான் கடந்த முறை சொன்னதைப் போல இப்பொழுதும் சொல்லுகிறேன். நீங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனின் உன்னதமான வல்லமையை, சர்வ வல்லமையிலே காண்பீர்கள். அந்த இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையானது இதுவரையிலும் நாம் நினைத்திராத அளவிற்கு அல்லது நம்பமுடியாத அளவிற்கு அளவுக்கதிகமாய், அபரிவிதமாக இருக்கும். இப்பொழுது அது வாசலண்டை சரியாக இருக்கிறது. உங்களுடைய சொந்த சபையின் வாசலிலே நிரூபனப்பட்டிருக்கிறதை உங்களால் பார்க்கமுடிகிறதா? ஆகவே என் அருமையான நண்பர்களே கிறிஸ்துவை ஒருபோதும் விட்டுவிடாதிருங்கள். சிலுவை சுமந்து அவருக்காக ஜீவியுங்கள். உங்கள் இருதயத்தையும் உங்களுடைய பரிசுத்த கரத்தையும் தேவனுக்கு நேராக உயர்த்துங்கள். ஒருவேளை சபை இப்படியும் அப்படியுமாக அல்லது மக்கள் அப்படி இப்படி பேசினால் அதற்கு எந்தவித கவனத்தையும் செலுத்தாதிருங்கள். உங்களுடைய இருதயத்தை சிலுவையின் மேலாகவும் கிறிஸ்துவின் மேலாகவும் வைத்து அவருக்காக ஜீவியுங்கள். தேவன் அதை உங்களுக்கு அருள்வாராக. நாம் காலங்கள் சந்திக்கும் சந்திப்பில் இருக்கிறோம். நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை சற்று வணங்கலாமா. இப்பொழுது நாம் ஜெபத்தில் இருக்கும் நேரத்தில், சகோதரி அவர்கள், பாடல் எண் : 189 இல்லை 84, “என் விசுவாசம் உம்மை நோக்கிப் பார்க்கிறது” என்ற அருமையான பழைய பாடலை இசைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய தலைகள் தாழ்த்தியிருக்கட்டும். 54நண்பனே, நாம் சந்திப்பில் இருக்கிறோம். நாம் சரியாக அங்கே வந்து விட்டோம். ஆண்கள் பெண்கள் மத்தியிலே நீங்கள் காண்கிற இந்த தாறுமாறாக்கப்பட்ட மனத்துயரமான காரியம் எதைச் சுட்டிக்காட்டுகிறது என்று பார்த்தீர்களா? நான் இதை வேதாகமத்தின் மூலம் உங்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளேன். அவைகள் எப்பொழுதுமே சந்திப்புகளில் நடக்கின்றன. ஒரு போதும் சந்திப்பிற்கு முன்பாக இல்லை. எப்பொழுதுமே சந்திப்புகளில் நடக்கின்றன. ஆனால் மனிதர்களோ அதிலிருந்து வழிவிலகி இருக்கிறார்கள். அவர்கள் வேத பாண்டியத்திலே மூழ்கிப் போனவர்களாய், அற்புதங்களின் நாட்களெல்லாம் கடந்துவிட்டது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா? அவர்கள் அவ்விதமாகவே எல்லா காலத்திலும் செய்தனர். ஆனால் காலம் மாறுவதற்கு சற்று முன்னதாக தேவன் அவருடைய சர்வ வல்லமையிலே வந்து இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை நடப்பித்திருக்கிறார். இந்த காரியத்தினால் தான், மக்கள் என்னை பேசுகிறார்கள். அந்தப்படியே அதை விசுவாசிக்கிற எல்லா கிறிஸ்தவர்களையும் பேசுவார்கள். ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்கு அன்று என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? அவர்கள் யாவரும் பாதுகாப்பாய் இருந்தார்கள். ஆபிரகாம் மிகவும் பாதுகாக்கப்பட்டிருந்தான். ஆமென். மோசேயும் பாதுகாக்கப்பட்டிருந்தான். எந்த ஒரு வாதையும் அவனையோ அல்லது இஸ்ரவேலரையோ நெருங்க முடியவில்லை. நோவாவையும் நெருங்க முடியவில்லை. இவையெல்லாம் சம்பவிக்கிறதற்கு முன்னதாக ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மகிமையின் படிக்கட்டிலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 55ஆகவே இந்த காலை வேளையிலே நீங்கள் கிறிஸ்து இல்லாமலும் உங்களுடைய ஆத்துமா சரி இல்லாமலும் இருப்பதாக உணருவீர்களானால்; உங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கும் வேளையில், உங்களை தேவனிடத்தில் தெரியப்படுத்தினால் நலமாயிருக்கும் என விரும்புகிறேன். நான் மறுபடியும் உங்களிடத்தில் எப்பொழுது வந்து பேசுவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாம் சரியாக சந்திப்பில் இருக்கிறோம். இப்பொழுது ஜெபத்திலே உங்களை நினைவு கூறவேண்டும் என்று விரும்புவீர்களானால் உங்கள் கரங்களை தேவனுக்கு நேராக உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக; ஐயா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக; நீங்கள் தான், ஆம், உங்களைத் தான், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக; அநேக கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அநேகர் உயர்த்தியிருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களுடைய தலைகளை தாழ்த்தியிருக்கும் நேரத்தில், சபையார் இந்த பாடலை மெல்லமாக பாடும்படி (Hum) விரும்புகிறேன். இதோ திறந்த பலிபீடம் இங்கிருக்கிறது, நீங்கள் வாஞ்சிப்பீர்களானால், இங்கு வந்து உங்கள் ஆத்துமாவுக்காக தேவனிடத்தில் என்னோடு சேர்ந்து ஜெபத்தை ஏறெடுக்கலாம். நான் உங்களோடு சேர்ந்து ஜெபிப்பதில் மகிழ்ச்சியடைவேன். என் விசுவாசம் உம்மை நோக்கி பார்க்கிறது (உம்மை தவிர வேறெதையுமில்லை), நீரே கல்வாரியின் ஆட்டுக் குட்டி, நீரே பரிசுத்த இரட்சகர், என் ஜெபத்தை கேட்டருளும், என் பாவங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போடும், ஓ இன்றைய தினம் துவங்கி, நான் முற்றிலும் உம்முடையவனாகட்டும். உம்முடைய மகத்தான கிருபையை பொழியப் பண்ணும். நீங்கள் ஜெபிக்கிறீர்களா? அவர் உங்கள் மேல் இரக்கமாய் இருக்கும்படி கேட்கிறீர்களா? பாவத்தில் இருக்கும் நண்பனே, மனந்திரும்பு. உன் ஜீவியத்தை இப்பொழுதே அவரிடம் கொடு. என் வைராக்கியத்தை பெருகப்பண்ணும், நீர் எனக்காக மரித்தீர், ஆகவே நான் உம் மேல் கொண்டிருக்கும் அன்பு தூய்மையாயும், அனலாயும், மாறாததாயும், கொழுந்துவிட்டு எரியட்டும். 56இப்பொழுது இசை இசைக்கிற சகோதரி அடுத்த சரணத்தை இசைக்கிற வேளையில், நாம் தொடர்ந்து ஜெபத்தில் இருக்கலாம். பரலோகப் பிதாவே, ஆண்டவரே, சொல்லப்போனால் நாங்கள் எதற்கும் பாத்திரர்கள் அல்ல. ஆனால் நீர் உரைத்து நாங்கள் பிழைத்ததினிமித்தம் இங்கு வந்திருக்கிறோம். நீரே எங்களை போஷித்து எங்களை பாதுகாத்தீர். ஆண்டவரே! உம்மை ஏற்றுக் கொண்ட ஜனங்களாகிய நாங்கள் நிச்சயமாகவே நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். ஓர் நாளில் நாங்கள் மறுரூபமாவோம் என்பதை அறிந்திருக்கிறோம். அப்போது நாங்கள் ஜீவிக்கின்ற இந்த அவமானமுள்ள பழைய சரீரமானது மாற்றப்பட்டு உம்முடைய சரீரம் போலாகும். இப்பொழுதோ இந்த பேழைக்குள் நாங்கள் பத்திரமாய் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம். மேலும் இக்காலையில் உம்முடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியினாலும், நீர் அந்த வழிகாட்டும் பலகையை மக்களிடம் கொண்டு வந்தீர். நாங்கள் இப்போது முடிவில் இருக்கிறோம், காலம் மாறுதலிலே இருக்கிறோம். அற்புதங்களும் அடையாளங்களும் தோன்றுகின்றன. மகத்தான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆண்டவரே, நாங்கள் முடிவில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால் தான் இந்த காரியங்கள் எல்லாம் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. நாங்கள் எந்த நேரத்திலும் தேவன் வருகிறதைக் காணக்கூடும். ஆண்டவரே நீர் மக்களின் இருதயத்தை அறிந்திருக்கிறீர், அவர்கள் இப்பொழுது இங்கு வந்து இதை ஏற்றுக்கொள்ளும்படி நான் அவர்களுக்கு இந்த அழைப்பைக் கொடுக்கிறேன். ஆண்டவரே, அவர்கள் வந்து உம்மை ஏற்றுக் கொள்வார்களாக. ஏனெனில் “என்னிடத்தில் வருகிறவர்களை நான் ஒரு போதும் புறம்பே தள்ளேன். என்னுடைய வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றீர். 57பிதாவே, நீர் இன்று மக்களின் இருதயங்களோடு, இடைபடும்படியாக ஜெபிக்கிறேன். எல்லோரையும் இணங்க வைக்கும்படி கேட்கவில்லை. ஏனெனில் அப்படிப்பட்டதான நாட்கள் கடந்து போய்விட்டது என நம்புகிறேன். ஆனால் உம்மிடத்தில் வரவேண்டிய மீதமுள்ளவர்கள், தெளிந்த புத்தியோடும், நல்ல மனநிலையோடும், அவர்களின் அறிக்கையின் பேரிலே, உம்மை விசுவாசித்தவர்களாக, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டும், மற்றும் தேவன் அவர்களுடைய இருதயத்திலே இடைபட்டுப் பேசினார் என்றும் கோருகிறவர்களாக உம்மிடத்தில் வரவேண்டி இருக்கிறது. ஆண்டவரே, நீர் அவ்விதமான இருதயங்களை ஏற்கனவே தொட்டிருப்பீரானால், மீண்டுமாய் இன்றைக்கு ஒரு விசை தொடும்படி ஜெபிக்கிறேன். ஒருவேளை இதுவே கடைசி முறையாக இருக்கக் கூடுமானால், பிதாவே நீர் அதை செய்வீராக. உம்முடைய வார்த்தையே சத்தியமாய் இருக்கிறது. ஆண்டவரே, அவர்களை உமக்கே சமர்பிக்கிறோம். இப்போது நாங்கள் இந்த கடைசியான சரணத்தை பாடும் வேளையில், பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு இருதயத்தோடும் இடைபடுவாராக. இப்பொழுது உங்கள் தலைகள் தாழ்த்தியிருக்கட்டும். பாவத்தில் இருக்கும் நண்பனே, நீ பலிபீடத்தண்டையில் ஜெபிக்க வாஞ்சிப்பாயானால் இங்கே கடந்து வா. வந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொள். பின் மாற்றத்தில் போனவர்களே, இப்பொழுதே இங்கு வந்து பலிபீடத்தண்டையில் நிற்பீர்களாக. நாங்களும் உங்களோடு சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறோம். நல்லது. “வாழ்க்கையின் இருளான கட்டத்திலே நான் நடக்கும் வேளையிலே (நீங்கள் அதைத் தான் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்) மற்றும் சோகம் என்னை சூழ இருக்கும் நேரத்திலே (மரணம், வியாதி,) கர்த்தாவே, நீரே என் வழிகாட்டியாய் இருப்பீராக (ஓ! தேவனே) இருள் பகலாக மாறட்டும், துக்கத்தின் கண்ணீரை துடைப்பீராக, நான் உம்மை விட்டு ஒருபோதும் விலகாமல் இருப்பேனாக. 58இப்பொழுது உங்கள் தலைகள் தாழ்த்தியிருக்கட்டும். சகோதரன் உட், உங்கள் தலையை சற்று உயர்த்தும் படி கேட்டுக் கொள்கிறேன். சகோதரன் காக்ஸ், நீங்கள் இந்த கட்டிடத்தில் இருக்கிறீரா? சகோதரன் பிலீமன் (Fleeman) நீங்களும் இருக்கிறீர்களா? நீங்கள் மாத்திரம் உங்கள் தலையை சற்று உயர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு தீர்க்கதரிசி தன்னுடைய சொந்த நாட்டில் தன்னுடைய சொந்த மக்களிடத்திலே ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” இப்பொழுது எங்கள் இரக்கமுள்ள பரலோக பிதாவே, இந்த செய்தியை உமக்கே சமர்பிக்கிறோம். ஆண்டவரே, இங்கே மக்களின் இருதயத்தின் ஆழத்தில் விதைக்கப்பட்ட விதைகள் யாவும், அந்த மகிமையான நாளிலே, இயேசுவானவர் வரும்போது, பரிசுத்தவான்கள் யாவரும் காணப்படுவார்களாக. அப்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளப்பட்டு மகிமைக்கு கொண்டு போகப்படுவார்களாக; மற்றும் எங்களுடைய கர்த்தராகிய இயேசுவானவர் திரும்பி வருகிற நாள் எப்பேற்பட்ட சந்தோஷமுள்ள நாளாய் இருக்கிறது. ஆகவே நாங்கள் இந்த நாளிலே ஜீவிப்பதை அறிந்து மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். தேவனே! நான் செய்த எல்லாவற்றிற்காகவும் மனந்திரும்புகிறேன். நாங்களாகவே உத்தமமாய் ஜீவிக்க முடியாது என்பதை அறிந்திருக்கிறோம். நாங்கள் துவக்கத்திலிருந்தே பாவிகள் ஆண்டவரே. நான் தினமும் பாவம் செய்கிறேன் என்பதை அறிந்தவனாய் உம்மையே ஒவ்வொரு நாளும் நம்பியிருக்கிறேன். உம்மை பிரியப்படுத்தாத காரியங்கள் தினமும் என் ஜீவியத்திலே எனக்கு நேரிடுகிறது என்பதை அறிந்திருக்கிறேன். ஆகையால் என் தேவனே, இந்தக் காலை வேளையிலே என்னுடைய ஆத்துமாவை இங்கே இந்த கூடாரத்திலே, இந்த பலிபீடத்தண்டையிலே சாஷ்டாங்கமாய் கிடத்தி என்னுடைய தவறை அறிக்கையிட்டு உம்மை ஏற்றுக் கொள்கிறேன். 59ஓ! தேவனே! தெய்வீக வரங்களைக் குறித்து நீர் அன்றொரு இரவில் அற்புத விதமாய் எனக்குக் காண்பித்தீர், ஆனால் நீர் விரும்பின வண்ணம் நான் அதை உபயோகிக்கவில்லை. அதற்காக வருந்துகிறேன். ஆண்டவரே, தரிசனத்திலே அதற்காக மனந்திரும்பினேன். இப்பொழுதும் நான் வாசம் செய்யும் இந்த பரிமானத்திலேயும் உம்மிடத்தில் மனந்திரும்புகிறேன். நீர் தாமே என்னை மன்னித்து எனக்கு உதவி செய்வீராக. இந்த காரியங்கள் எல்லாம் எதிர் காலத்தில் சம்பவிக்கும் என்பதை முன்னமே நீர் உம்முடைய கிருபையினால் எனக்கு அறிவித்திருந்தீர். தேவனே, அவை சம்பவிக்கும் என்பதை அறிகிறதினாலே என் ஆத்துமாவையும் என் இருதயத்தையும் நீர் பரிசுத்தப்படுத்தும்படி உம்மிடத்தில் இதை ஏறெடுக்கிறேன். ஓ! தேவனே, பூமியை மட்டும் உலுக்குவதல்ல, பரத்தையும் மற்றொரு முறை உலுக்குவீராக. கர்த்தாவே, பசியோடும், தாகத்தோடும், அழுகையோடும், பிச்சை எடுத்துக் கொண்டும், இருளிலே அஞ்ஞானிகள் மரித்துக் கொண்டும் இருக்கும் லட்சோப லட்சக்கணக்கானோர் மத்தியிலே நாங்கள் ஊழியம் செய்யும்படி போவோமாக. ஓ! தேவனே, நவீன கால சோதோம் கொமோராவாய், மூடத்தனத்திலே விழுந்து போன இந்த சீர்கெட்டுப்போன தேசமாகிய அமெரிக்காவை உலுக்கும். “ஓ, அதிகாலையின் மகனாகிய விடி வெள்ளியே, நீ எப்படி விழுந்தாய். நீ நன்றாக ஓடினாய் அல்லவா. உனக்கு என்ன ஆயிற்று?” “ஓ, எருசலேமே, எருசலேமே எத்தனை முறை உன்னைகூட்டிச் சேர்த்தேன்”. 60அன்று அவர் அழுதது போல இன்று அமெரிக்காவைப் பார்த்து என்னுடைய இருதயத்திலே “அமெரிக்காவே, எத்தனை முறை நான் உன்னை தேசங்களுக்கும், உலகத்துக்கும் ஒரு எரிகிற தீப்பந்தமாய் வைத்தேன். ஆனால் நீயோ ஆலிவுட்டை ஏற்றுக் கொண்டாய். நீ இந்த உலகத்தின் பாணியை ஏற்றுக் கொண்டாய். நீ உன்னை யந்நே, யம்பிரேயிடமும் ஒப்புக் கொடுத்துள்ளாய். உன் நிலைமை எப்படியாய் மாறிப் போனது. இந்த தேசத்திலே வல்லமையுள்ள மனிதர்கள் எவ்வளவாக ஊழியத்தை செய்திருந்தார்கள். அவர்கள் முழுவதும் சுற்றி தங்களால் முடிந்தமட்டும் ஊழியம் செய்தார்கள். ஆனால் நீயோ அதைவிட்டு விலகி மற்ற தேசங்களுக்கு ஓடுகிறாய்” என்று பரிசுத்த ஆவியானவர் அழுகிறார். ஓ தேவனே, அவள் தன்னுடைய அழிவின் சாம்பலிலே அமர்ந்திருக்கிறாள். அவள் தன்னுடைய கவர்ச்சியென்னும் துப்பாக்கியின் முனையிலே அமர்ந்திருக்கிறாள். ஓ அந்த மகத்தான நாளிலே, தேவ குமாரன் அவருடைய நீதியின் பரிசுத்தத்திலே பரத்திலிருந்து வெளிப்படும்போது, நாங்கள் எப்படி அவர் முன் நிற்க போகிறோம்? ஓ! தேவனே, எங்களுடைய இருதயம் இன்றைக்கு உம்மிலே நிலவரப்படும்படி செய்வீராக. எங்களுடைய பாவங்களையெல்லாம் மன்னியும். 61மற்றும் பிதாவே, இந்த காலை வேளையில் இங்கு இருக்கும் சுவிசேஷ ஊழியக்காரர்களை ஆசீர்வதியும். ஓ தேவனே! இன்று அவர்கள் தங்கள் இருதயத்தில் இந்தச் செய்தியைப் பெற்றுச் செல்வார்களாக. “இந்த கடைசி காலத்தையும், அதினுடைய அடையாள பலகைகளையும் பார்க்கிறேன், நாங்கள் சந்திப்பில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறேன். இங்கு நடக்கிற சம்பவங்கள் எல்லாம் அதையே குறிக்கிறது. மற்றும் ஏன் என்னுடைய இருதயம் கடந்த சில வருடங்களாக கலங்கினது என்று அறியாமல் இருந்தேன்” ஆம் ஆண்டவரே, ஆம் அவர்கள் அதை காணட்டும். அவர்களுடைய கண்கள் திறக்கப்படுவதாக. அவர்கள் சுற்றிலும் பார்த்து, “இங்கே அது நடந்து கொண்டிருக்கிறது, அது சரிதான், நான் காண்கிற இந்த பொல்லாங்கான காரியங்கள் யாவும் அடையாளங்களாக இருக்கிறது. அவையெல்லாம் எதிரியிடமிருந்து வருகிற இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களே. அவன் மிகப்பெரிய அதிசயங்களை செய்து கொண்டிருக்கிறான். வானத்திலிருந்து நெருப்பை கொண்டுவரும் அளவிற்கு பெரிய அற்புதங்களை செய்கிறான். ஆம், பூமியை சுற்றிலும் செயற்கைக் கோள்களை வைத்திருக்கிறார்கள். ஆகவே எதிரியானவன் மேலிருந்து கொண்டுவருகிற நெருப்பு போன்ற அடையாளங்களெல்லாம் இயற்கையான காரியங்களாக ஆகிவிட்டது. அவன் போலி சூரியன்களையும் போலி சந்திரன்களையும் இதுபோன்று அனேக காரியங்களைக் காண்பிக்கிறான்” என்று சொல்லட்டும். 62அதே சமயத்திலே தேவரீர், அவர்களால் புரிந்து கொள்ளமுடியாத அடையாளங்களும் வானத்தில் தோன்றும் என்றீர். நாங்கள் அதை பார்ப்பதற்காகவே வாழ்ந்து வருகிறோம். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆண்டவரே, நான் கிறிஸ்துவுக்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆண்டவரே இப்பொழுது உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனாகிய நான் மனவருத்தத்தோடு கன்னத்தில் கண்ணீர் வடிய என் ஜீவியத்தை மீண்டுமாய் இன்று ஒப்புக் கொடுக்கிறேன். அன்பான தேவனே, நான் தாழ்மையை கடைபிடிக்க எனக்கு உதவி செய்யும். அன்பான தேவனே, இதோ இந்தஅவமானத்தின் கூடாரத்திலிருந்து, இயேசுவே, நீர் மரணத்தை அனுமதித்து என்னை விடுவிக்கும் மட்டும் நான் உம்முடைய பணியை செய்யும்படி என்னை சுற்றிலும் உமக்காக ஊழியம் செய்யும் தாழ்மையுள்ள மக்களை வையும். அதன்பின் பிதாவே நான் உம்மோடு இருக்க விரும்புகிறேன். மேலும் இந்த அன்பான சபையை ஆசீர்வதியும். தேவனே, எங்களுடைய அருமையான மேய்ப்பரும் எங்களுடைய அருமையான நண்பருமாகிய சகோதரன் நெவிலை ஆசீர்வதியும். அவர், குளிரானாலும் வெயிலானாலும், கஷ்டமானாலும், சந்தோஷமானாலும், எப்படியிருந்தாலும் அவர் கர்த்தராகிய இயேசுவின் கலப்படமற்ற சுவிசேஷத்திற்காக இங்கு நிற்கிறவராய் இருக்கிறார். ஆண்டவரே, அவரையும் அவருடைய அன்பான மனைவியையும் அவருடைய சிறு பிள்ளைகளையும் ஆசீர்வதியும். ஓ தேவனே, அவர் தாமே இயேசுகிறிஸ்துவின் வருகை வருமட்டும் மக்களுடைய இருதயத்தில் சுவிசேஷமானது கொழுந்துவிட்டு எரியும்படி செய்வாராக. ஆண்டவரே, அவரை ஆசீர்வதிப்பீராக. அவருக்கு நல்ல பெலனை தாரும். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அவர் தாழ்மையுள்ள மனிதர் என்றும், உமக்காக ஊழியம் செய்கிறார் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த சிறு மந்தையை ஒரு சமயம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதோ அவரிடம் விட்டுச் சென்றிருக்கிறேன். ஆகவே ஆண்டவரே அவருக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். மற்றும் தேவனே அவர் இன்னும் அனேக ஆடுகளை மந்தைக்குள் சேர்த்திட நீர் அவருக்கு உதவி செய்யும்படி ஜெபிக்கிறேன். அதை அருள்வீராக. 63ஆண்டவரே, அதை இங்கிருக்கும் எல்லா ஊழியக்காரர்களுக்கும், இங்கிருக்கிறவர்கள் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கிற எல்லா ஊழியக்காரர்களுக்கும் அருள்வீராக. ஏனெனில் இது மிகவும் தேவையுள்ள நாட்கள் என்பதை அறிந்திருக்கிறோம். அடையாளங்களை நாங்கள் காண்கிறோம். பிசாசு கெர்சிக்கிற சிங்கம் போல் சென்று மக்களை தவறாய் குற்றம் சாட்டி ஆள் மாறாட்டம் செய்து கொண்டிருக்கிறான். ஆனாலும் தேவனே அதற்கு எதிரே நீர் பரிசுத்த ஆவியினாலே அதற்கு விரோதமாக தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறீர். அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கிறோம். இப்பொழுது எங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பீராக. பிதாவே நாங்கள் வியாதியஸ்தருக்காக இன்று ஜெபிக்கப் போகிறோம். நீர் தாமே இங்கிருக்கிற ஒவ்வொரு ஊழியக்காரரையும் மீண்டுமாக அபிஷேகிப்பீராக. அதை அருளும் ஆண்டவரே. மற்றும் இங்கு இருக்கிற ஒவ்வொரு விசுவாசியும் ஒவ்வொரு வியாதியஸ்தரும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருப்பார்களாக. நாங்கள் இங்கிருந்து கடந்துபோகும் போது ஒவ்வொருவரும் முற்றிலும் சுகத்தைப் பெற்றவர்களாக கடந்து போகட்டும். தேவனுடைய மகிமை எங்கள் ஆத்துமா மேல் இருப்பதாக. இதை இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். 64என் விசுவாசம் உம்மை நோக்கிப் பார்க்கிறது நீரே கல்வாரியின் ஆட்டுக்குட்டி, நீரே பரிசுத்த இரட்சகர் (பாடும் போது உங்கள் கரத்தை உயர்த்துங்கள்) இப்பொழுது என் ஜெபத்தை கேட்டருளும், என் பாவங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போடும், ஓ! இந்நாள் முதலாய் முற்றிலும் உம்முடையவனாகட்டும். இப்பொழுது மெதுவாக “ஆண்டவரே என்னோடிரும்” என்ற பாடலைப் பாடலாம். ஆண்டவரே, இதோ நாங்கள் எங்கள் தலையை தாழ்த்திய வண்ணமாய், எங்கள் ஜீவனையும், எங்கள் ஊழியத்தையும், எங்களுடைய எல்லா காரியத்தையும் உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். ஆண்டவரே, எங்கள் எல்லோரையும் உபயோகப்படுத்தும். ஒவ்வொருவரும் இங்கிருந்து ஊக்குவிக்கப்பட்டவர்களாக கடந்து செல்வார்களாக. இந்த நாள் நாங்கள் எங்களுடைய ஞாபகத்திலே எப்பொழுதும் கொண்டிருக்கிற நாளாக இருப்பதாக. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் எங்களோடு இருந்து எங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். ஆண்டவரே, இன்று, வியாதியாயிருக்கிறவர்களுக்கு அவர்களுடைய தேவையை தந்தருளும். அருளும் ஆண்டவரே. இரக்கமாயிரும் பிதாவே! இதை இயேசுவின் நாமத்தில் அருளும்படி ஜெபிக்கிறோம். மற்றும் மகத்தான போதகரே, நாங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அந்நாளில் எங்கள் எல்லோருக்கும் போதித்தீர். நீர் அதை சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்து எங்களுக்கு ஒரு உதாரணமாக வைத்தீர். நீங்கள் ஜெபம் பண்ணும்போது இந்த விதானத்திலே பண்ணுங்கள் என்றீர். அதன்படியே; “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்“. 65இப்பொழுது சகோதரியே, “நம்பிடுவாய் யாவும் கைகூடும்” என்ற பாடலை வாசிப்பீர்களா! இப்பொழுது எத்தனை பேருக்கு ஜெபிக்கவேண்டும்? யாருக்கெல்லாம் ஜெபிக்க வேண்டுமோ உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நீங்கள் யாவரும் என்னுடைய வலது பக்கமாய் வரிசையிலே நிற்பீர்களா? எத்தனை பேர் நிற்க முடியுமோ அத்தனை பேர் நிற்கலாம். அதன் பிறகு, நடுவிலும் வரிசையாக நிற்கலாம். இதோ இந்த இடத்தில் இருக்கிறவர்கள், நீங்கள் நடுவில் நிற்பவர்களோடு சேர்ந்து வரிசையில் நில்லுங்கள். நல்லது. இப்பொழுது நாம் சேர்ந்து இந்த பாடலைப் பாடலாம். நம்பிடுவேன், நம்பிடுவேன், யாவும் கைகூடிடும், நம்பிடுவேன் நம்பிடுவேன், நம்பிடுவேன் யாவும் கைகூடிடும், நம்பிடுவேன் இப்பொழுது எத்தனை பேர் “நான் இதற்கு முன்பு ஒரு முறை கூட சுகமளிக்கும் கூட்டத்தில் பங்கேற்றதில்லை” என்று சொல்லுகிறீர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? ஓ எல்லோரும் பங்கேற்றிருக்கிறீர்கள். ஆச்சரியமாய் இருக்கிறது. சர்வ வல்லமையானது இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது ஏதோ ஒன்று சரியாக வந்து என்னுடைய மனதை மாற்றுகிறது. இந்த ஜெப வரிசையைப் பார்க்கும் போது நீங்கள் இங்கிருந்து கடந்து செல்வதற்கு மூன்று மணி வரை ஆகும் என்று நினைக்கிறேன். சகோதரன் டாம்மெரிடித் எங்கேயிருக்கிறார்? அவர் இன்னும் இங்கு இருக்கிறாரா? சகோதரன் ஜீனியர் ஜாக்ஸன்? அவர்கள் இருவருமே ஊழியம் செய்கிறவர்கள். தெய்வீக சுகமளித்தலை நம்புகின்ற சுவிசேஷ பிரசங்கிகள் மற்றும் ஊழியர்கள் யாவரும் இங்கு வரும்படிகேட்டுக் கொள்கிறேன். “நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய், நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய் 66சற்று பொறுங்கள். நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நான் இந்த வாரத்திலும் மற்றும் இந்த காலைப் பொழுதிலும் சுகமளிக்கும் ஆராதனையை கொண்டிருக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே சகோதரன் காக்ஸ் மற்றும் இங்கிருக்கிறவர்களில் அநேகரிடம் கூறியிருந்தேன். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். காரணம் என்னவெனில், என்னுடைய நண்பர்களில் சிலர் என்னை தொலைபேசியில் அழைத்து, சகோதரன் டர்பின் அவர்களுடைய இடத்தில் சகோதரன் ஹால் அவர்கள் சுகமளிக்கும் ஆராதனையை கொண்டிருக்கப் போகிறார் என்று சொன்னார்கள். ஆகவே அவர்களுக்கு கனத்தை கொடுக்கும் பொருட்டு இதைச் செய்தேன். சபையே, சகோதரன் ஹால் அவர்கள் அங்கு கூட்டத்தை நடத்தப் போகிறார். அந்த கூட்டத்தை குறித்ததான அறிவிப்பை கடந்த வாரத்திலே செய்திருந்தேன். நம்முடைய சகோதரன் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறார் என்ற காரணத்திற்காகவே அந்த அறிவிப்புகளைச் செய்தேன். ஓ, சகோதரன் ஹால் இங்கு இருக்கிறாரா? அங்கே இருக்கிறது நீர் தானா? ஓ, சகோதரன் ஹால் நம்மோடு இருக்கிறார். நல்லது. சகோதரன் ஹால், உங்களுடைய கூட்டத்தை இன்று இரவுடன் முடிக்கப் போகிறீரா? ஓ நல்லது. சகோதரன் டர்பினுடைய இடம் நதிக்கு அப்பால் இருக்கிறது. அங்கே சுகமளிக்கும் கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். சகோதரன் ஹால் ஒரு அருமையான சகோதரன். அவரை எனக்குத் தெரியும். அவர் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட ஊழியக்காரன். 67சகோதரன் ஹால், நீர் உம்முடைய ஊழியத்திற்கு கடந்து செல்லுவதற்கு முன், உங்களுக்கு நேரம் இருக்குமானால், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க எங்களோடு இங்கு நிற்பீரா? உங்களால் இங்கு வரமுடியுமா? இது போன்று வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஊழியக்காரரை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட நான் விரும்பவில்லை. நீர் இங்கே வந்து எங்களோடு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி நான் விரும்புகிறேன். நாம் எல்லோரும் சகோதரன் ஹால் அவருக்காக “தேவனே உமக்கு நன்றி” என்று சொல்லலாமா? அவர் இந்த வாரத்தில் சகோதரன் டர்பின் அவர்களின் இடத்தில் கூட்டத்தை நடத்துகிறார். அனேகர் அவருடைய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், அதில் எந்த சந்தேகமுமில்லை. அவரைக் கடந்த முறை இங்கு பார்த்ததிலிருந்து நான் அவரை நேசிக்க ஆரம்பித்தேன். அவருடைய ஊழியத்தில் அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் போது தேவன் அவருக்கு மகத்தான வெற்றிகளைத் தந்திருக்கிறார். அவர் அதிகமாய் பிரயாணப்பட்டு வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். சகோதரன் ஹால், நீங்கள் மக்களுக்கு ஏதாவது சொல்லும்படி உங்களுடைய மனதில் கொண்டிருக்கிறீரா? நல்லது ஐயா. இந்த வாரம் உங்களுடைய கூடுகை நன்றாக நடைபெற்றதா சகோ. ஹால்? நீங்கள் இங்கு இருப்பதற்காக நாங்கள் அதிக சந்தோஷப்படுகிறோம். 68இப்பொழுது வியாதியஸ்தரே... அது மாத்திரம் அல்ல, இங்கிருக்கிற ஊழியக்காரர்கள் யாவரும் சர்வ வல்லமையை விசுவாசிக்கிறவர்களாக, ஒரு அரணான மதிலைப் போல் இங்கு நிற்கிறோம். நாங்கள் இந்த கடைசி காலத்திலே தேவனாகிய கர்த்தர் வியாதியஸ்தருக்கும் கட்டுண்டோருக்கும் சுகத்தைக் கொடுத்து அதிசயங்களை நட்பிப்பார் என்பதை விசுவாசிக்கிறவர்களாக இங்கு இருக்கிறோம். மற்றும் அவருடைய சர்வ வல்லமை என்ன செய்யும் என்று சொன்னதோ, அது அப்படியே நடக்கிறதை நாங்கள் காண்கிறோம். ஆகவே நாங்கள் இந்த காலை வேளையிலே உங்களுக்காக ஜெபிக்கும்படி இங்கு இருக்கிறோம். மேலும் தேவன் அதைச் செய்வார் என விசுவாசிக்கிறேன். இப்பொழுது ஒரு நிமிடம் (யாரோ ஒருவர் சகோ. பிரான்ஹாமிடம் பேசுகிறார்) என்ன? ரிவைவல் சென்டரிலிருந்து சகோதரன் ஜாக் ஓக்கி வந்திருக்கிறாரா? சகோதரன் ஜாக் ஓக்கி, நீர் எங்கு இருந்தாலும் பரவாயில்லை , நீர் இங்கு இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உம்மைக் குறித்து என்னுடைய சகோதரன் இப்பொழுது தான் கூறினார். சகோதரன் ஜாக் ஓக்கி, நீர் இந்த கட்டிடத்திலே இருப்பீரானால், நீர் எங்கிருந்தாலும் இங்கே முன்பாக வந்து எங்களோடு நிற்கும்படி விரும்புகிறேன். மற்ற ஊழியக்காரர்களையும் கொண்டிருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நீங்களும் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிப்பீர்களானால், இங்கே முன்பாக வாருங்கள். இப்படி வியாதியஸ்தர்களுக்கும், கட்டுண்டோர்களுக்கும் ஜெபிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது. அது நிச்சயமாகவே அருமையான காரியம். 69சகோதரன் ஓக்கி எங்கு இருக்கிறீர்? அங்கு நின்று கொண்டிருப்பது சகோதரன் ஓக்கியா? இல்லை. நல்லது, நான் மிகவும்... என்னது? என்ன சொல்லுகிறீர்கள்? (யாரோ ஒருவர் சகோ. பிரான்ஹாமிடம் பேசுகிறார்) நல்லது. இப்பொழுது சுவிசேஷகர்களே, நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் ஊழியம் செய்யும் சகோதரனாக இருப்பீர்களானால், இங்கு முன்பாக வந்து எங்களோடு ஐக்கியங்கொள்ளும்படி அழைக்கிறோம். ஓ, இது மிகவும்அருமையான காரியம். இங்கு முன்பாக வாருங்கள். சகோதரனே உங்கள் பெயர் என்ன? (ஜாக் ஆர்க்லே என்கிறார் அந்த சகோதரன்) சகோதரன் ஜாக் ஆர்க்லே, நீங்கள் இங்கு இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதோ சகோதரன் ஜாக் நம்மோடு இருக்கிறார். இது மிகவும் சிறந்த காரியமாகவும் அருமையானதாகவும் இருக்கிறது. ஊழியக்காரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு வரும்போது ஒருவரையொருவர் கைகளை குலுக்கி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த காலை வேளையில் தேவன் நம்மை இங்கு கொண்டு வந்ததற்கான காரணம் என்னவெனில், இந்த மக்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்பதற்காகவே. இதில் சிலர் மரணப்படுக்கையில் இருக்கின்றனர். அங்கே வெள்ளைத் தொப்பி அணிந்திருக்கும் சீமாட்டிக்கு புற்று நோய் இருக்கிறது, இங்கே எனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறாரே, அவருக்கும் புற்று நோய் இருக்கிறது. ஆகவே இதுபோன்று அனேக காரியங்கள் இங்கு இருக்கின்றன. இங்கே ஒரு சகோதரி குணமடைய முடியாத உடைந்த கணுக்காலோடு கிடத்தப்பட்டிருக்கிறார். இது போன்று இங்கு அனேக அனேக காரியங்கள் இருக்கின்றன. ஆர்த்ரைடிஸினால் ஒரு பெண் இங்கே சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள். தேவன் அவளை குணமாக்குவார் என்ற விசுவாசத்தோடு அவள் இங்கிருக்கிறாள். தேவன் அதைச் செய்வார் என்று நாங்களும் விசுவாசிக்கிறோம். 70ஆகவே சகோதரர்களே, நாம் செய்யக் கூடிய ஒரே ஒரு காரியம் என்னவெனில் அவர்களுக்காக ஜெபிப்பது மட்டுமே. அது சரிதானே? (அதற்கு அந்த சகோதரர்கள், 'ஆமென்' என்கின்றனர்). ஜெபியுங்கள், அது போதும். இப்போது நான் ஜெபத்திற்குள் போவதற்கு சற்று அதிகமாக பெலவீனமாக இருக்கிறேன். பாருங்கள், நான் வெறும்... நான் கடுமையாய் பிரசங்கம் செய்ததினிமித்தம் பெலவீனமாக இருக்கிறேன். நல்லது, இப்பொழுது நம்முடைய தலையை சற்று தாழ்த்தலாம். ஊழியர்களே, நீங்கள் யாவரும், ஒவ்வொருவராய் முன்பாக வந்து, இங்கே வரிசையாய் நிற்கும்படி கேட்கிறேன். இது நாம் வியாதியஸ்தருக்கு ஜெபிக்க ஏதுவாய் இருக்கும். நானும் உங்களுடனே வந்து நிற்கப் போகிறேன். நாம் ஒவ்வொருவராய், ஒவ்வொரு வியாதியஸ்தருக்காகவும் ஜெபிக்கலாம். அதாவது முதலில் ஒருவர் ஜெபித்த பின்னர், மற்றவர்கள் ஜெபிக்கும்படி அவர்களை அனுப்பலாம். இப்படி நாம் ஒவ்வொருவருக்காவும் ஜெபிக்கலாம். நாம் ஜெபிக்கும் போது, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைத்து, தேவன் அவர்களை சுகமாக்கப் போகிறார் என்று விசுவாசிப்போமாக. சகோதரர்களே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சகோதரர்கள் அதற்கு 'ஆமென்' என்கின்றனர்) சகோதரன் ஹால், நீர் உம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீரா? சரி. அது நடக்கத்தான் போகிறது. இப்பொழுது சகோதரர்களே, நீங்கள் சற்று நகர்ந்து, அந்த படிகள் பக்கமாய் ஒரு வரிசையாக நிற்கும்படி கேட்கிறேன். நான் இங்கிருந்து துவங்கட்டும், அதன்பின் ஒவ்வொருவராக ஜெபிக்கலாம். மற்றும் சபையாரே, வியாதியஸ்தர்களுக்காக நாங்கள் ஜெபிக்கும் போது, நீங்கள் யாவரும் எங்களோடு சேர்ந்து ஜெபிக்கும்படி விரும்புகிறோம். நண்பர்களே அதைச் செய்வீர்களா? 71இப்பொழுது சபையாரே, இந்த காலை வேளையிலே உங்களுக்காக ஜெபிக்கும்படிக்கு, இங்கு அருமையான சுவிசேஷகர்களும் சுகமளிக்கும் கூட்டத்தை நடத்தும் ஊழியக்காரர்களும் இருக்கிறார்கள். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஆராதனைக்கு வந்திருப்பதில் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். நாம் இன்னொரு விசையாய் ஜெபிக்கலாம். பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே எங்களை இப்பொழுது ஏற்றுக்கொள்வீராக. பரிசுத்த ஆவியானவர் எங்கள் மேலாக வந்து நாங்கள் இன்றைக்கு எதைக் கேட்கிறோமோ அதை எங்களுக்குத் தந்து எங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இதோ இப்பொழுது தேவனின் மகத்தான சர்வ வல்லமையின் வல்லமை தாமே எங்கள் மேல் இறங்குவதாக. ஓ தேவனே, அன்று சேரூபீன்களின் பிணைக்கப்பட்டிருந்த இறக்கைகளுக்குள் இருந்த ஷகினா மகிமை தாமே, சிலுவையிலே ஒன்றோடொன்று இணைந்த கைகளுக்குள்ளாக வந்தது. தேவனே, இன்றைக்கு சுகத்தைப் பெறும் படி அது எங்கள் மேலாக இறங்கட்டும். நாங்கள் தேவனின் வல்லமையை எதிர்பார்க்கிறோம். இந்த ஆசீர்வாதங்களை மக்களுக்காக கோருகிறோம். ஒருவராகிலும், ஒருவர் கூட இதை விட்டுவிடாதபடி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சுகமடைவார்களாக. ஆமென். 72இப்பொழுது, சகோதரன் நெவில், நாம் ஜெபத்தை துவங்குவதற்கு முன், நீர் எண்ணெய்யை எடுத்து இங்கு முன்பாக வந்து இந்த இடத்தில் நிற்கும்படி கேட்கிறேன். நாம் முதலாவதாக படுக்கையில் இருக்கும் ஸ்திரீக்காக ஜெபிக்கலாம். அதன்பின் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கலாம். முதலாவது ஒருவர் அந்த சகோதரிக்கு ஜெபித்த பின், மற்றவர்கள் வந்து ஜெபிக்க இடம் கொடுக்கும்படி நாம் திரும்பவும் இந்த இடத்திற்கே வந்துவிடலாம். நல்லது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லோரும் ஜெபத்திலே தரித்திருங்கள். ஜெபித்துக் கொண்டே இருங்கள். நல்லது சகோதரர்களே!, நாம் அவளுடைய சுகத்திற்காக ஜெபிக்கலாம். எங்கள் பரலோகப் பிதாவே, இங்கே படுக்கையிலே இருக்கும் எங்கள் சகோதரி, அவளுடைய வாழ்நாள் முழுவதும் இந்த படுக்கையிலேயே இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் பிதாவே, நாங்கள் விசுவாசிக்கிறது என்னவெனில், அவள் இன்று ஜெபிக்கப்படுவதற்கு இங்கு வந்திருக்கிறதினால், நீர் அதை உம்முடைய ஊழியர்காரர்களாகிய எங்கள் நிமித்தம் செய்வீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவளுடைய இந்த நிலைமையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எடுத்துப் போடுவீர் என்று தாழ்மையுடன் ஜெபிக்கிறோம். அவளுடைய உடைந்த கால் அல்லது பாதத்தில் எங்கே உடைந்திருக்கிறதோ அங்கே போதிய கால்சியத்தை (சுண்ணாம்பை) கொடுப்பீராக. அவள் தாமே சுகமடைந்து இங்கிருந்து நடந்து சென்று தேவனை மகிமைப்படுத்தும்படி ஜெபிக்கிறேன். எங்களுடைய கைகளை அவள் மேல் வைத்தவர்களாக இந்த ஆசீர்வாதத்தை இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 73பிதாவாகிய தேவனே, இந்த காலை வேளையில், இந்த பலிபீடத்தண்டையிலே நாங்கள் நின்றவர்களாக இந்த கருப்பின சகோதரிக்காக ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அந்நாளிலே இயேசு கொல்கத்தாவிலுள்ள கல்வாரிக்கு சிலுவையை சுமந்து செல்லுகையில், அதனுடைய பாரம் தாங்க முடியாமல் அவர் கீழே விழுந்த போது, அங்கே அவ்வழியே வந்த ஒரு கருப்பின மனிதன், அதைத் தூக்கி எடுத்து அவர் மீது வைத்து அதை சுமந்து செல்லும்படி அவருக்கு உதவிசெய்து, அந்த சிலுவையின் இரத்தம் தோய்ந்த அடிச்சுவடிகளில் நடந்து சென்றான். இதோ ஆண்டவரே, இங்கே அவனுடைய குமாரத்திகளிலே ஒருவள் பலவீனமும் சுகவீனமுமாய் இந்த சக்கர நாற்காலியில் இருக்கிறாள். கர்த்தாவே, நீர் மாத்திரம் அவளுக்கு இரக்கம் காட்டாமல் இருப்பீரானால், அவளுடைய ஜீவிய காலம் முழுவதும் அவள் இப்படியே இருக்க வேண்டியதாக இருக்கும். மருத்துவர்களும் கைவிட்டிருக்கிறார்கள். இயேசுவின் நாமத்தினாலே உன்னுடைய கால் சுகமடையட்டும். அவள் தாமே நடந்து சென்று முழுவதும் குணமாவாளாக. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 74அன்புள்ள நண்பனே, இயேசுவின் நாமத்தில் சற்று பொறுங்கள். இதோ ஒரு ஸ்திரீ ஜெபிக்கப்படும்படி இங்கே வருகிறாள். ஸ்திரீயே, இங்கே வாருங்கள். ஊழியர்களே நீங்களும்... எங்கள் அன்புள்ள பரலோகப் பிதாவே, எங்களுடைய கரங்களை எங்கள் சகோதரியின் மேல் வைக்கிறோம். அவர்களிடத்தில் சற்று முன்னேற்றம் இருக்கிறதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களுடைய விசுவாசம் அசையாமல் இருப்பதாக. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். இப்பொழுது நாங்கள் என்ன செய்தோம் என்று பார்த்தீர்களா? கர்த்தர் என்ன சொன்னாரோ அதையே செய்திருக்கிறோம். சரிதானே? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்) இங்கே நம்மிடம் வந்திருக்கும் நம்முடைய நண்பர்களும் ஊழியகாரர்களுமாகிய இந்த சகோதரர்களுக்காக சந்தோஷப்படுகிறோம். அப்படி விசுவாசிக்கிறவர்கள் நீங்கள் “ஆமென் '' என்று சொல்லுவீர்களா (சபையார் 'ஆமென்' என்கின்றனர்). என் அன்பான சகோதரர்களே, நீங்கள் எங்களோடு இருப்பதை நிச்சயமாகவே வரவேற்கிறோம். இன்று நாம் சரியாக நேரத்திற்கு இங்கிருந்து கடந்து செல்லப் போகிறோம். நீங்கள் இங்கு இருப்பதற்காக நாங்கள் சந்தோஷப்படுகிறோம். 75மேலும் சகோதரர்களே, நான் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிப்பேன். நீங்களும் எங்கு போனாலும் எனக்காக ஜெபியுங்கள். இப்பொழுதும் நான் ஊழியத்திற்காக வெளியிலே கடந்து செல்லுகிறேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். மற்றும் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்படி நம்முடைய சாலைகள் மீண்டும் மீண்டும் குறிக்கிடுவதாக. ஒருசமயம் சகோதரன் ஓக்க அவர்களுடைய குடும்பத்தினரை கலிபோர்னியாவில் சந்தித்தேன். அங்கிருப்பது டாக்டர் ஓக்கியா? (அதற்கு அந்த சகோதரன் நான் அந்த ஓக்கி இல்லை என்கிறார்) ஓ, இவர் வேறொரு ஓக்கியா. நல்லது ஐயா. சகோதரன் ஓக்கி அவர்களுடைய குடும்பத்தினர் அனேகரை எனக்குத் தெரியும். ஆனால் இவர் யாரோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு பல் மருத்துவராய் இருக்கிற டாக்டர் ஓக்கியை தெரியும். நீங்கள் அவருடைய சொந்தக்காரரா? (அவர் எனக்கு சகோதரன் முறை என்கின்றார் அந்த சகோதரன்) ஓ அவர் உங்களுக்கு சகோதரன் முறை, நல்லது, இதுமிகவும் அருமையானது. அவர் ஒரு அருமையான நபர். 76இப்பொழுது, சபையாரே நாங்கள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று பார்த்தீர்களா? நாங்கள் விசுவாசிக்காத பட்சத்தில் எங்களுடைய கைகளை வியாதியஸ்தர்கள் மீது வைக்கும்படி இங்கு நின்று இருக்கமாட்டோம். இங்கே நம்மிடையே இருக்கும் மக்களில் சிலர் புற்று நோயோடும், குருடாயும், முடக்கத்தோடும் ஒரு சமயம் இருந்ததை கண்டிருக்கிறோம். இங்கே முதல் முறையாக வந்தவர்கள் இருப்பீர்களானால், நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்கட்டும். அவ்விதமான நிலையிலிருந்து நான் தேவனால் சுகமாக்கப்பட்டேன் என்று சொல்லுகிறவர்கள், எத்தனை பேர் இங்கு இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அவர்கள் புற்று நோயிலிருந்தும், பார்வையின்மையிலிருந்தும், மற்றும் எல்லாவற்றிலும் இருந்தும் சுகமானவர்கள். பார்த்தீர்களா? அவர் அதே காரியத்தை உங்களுக்கும் செய்வார். பார்த்தீர்களா? நாங்கள் எங்களுடைய ஜெபத்திலே விசுவாசம் கொண்டிருக்கிறோம். நாங்கள் செய்வதெல்லாம் இது ஒன்று மாத்திரமே. இப்பொழுது நாம் இந்த கூட்டத்தின் நிறைவுக்கு வந்திருக்கிறோம். சகோதரன் நெவிலிடம் இந்த நேரத்தை கொடுப்பதற்கு முன்னதாக ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிறோம். இன்று இரவு நடக்க இருக்கும் கூட்டங்களை நினைவில் கொண்டிருங்கள். மற்றும் உங்களுடைய உறவினர்களில் யாராவது அல்லது யாராயிருந்தாலும், இந்தகாலை வேளையில் அவர்களால் இங்கு ஜெபிக்கப்படும்படி வரமுடியாமல் போனதென்று அறிவீர்களானால், இதோ இந்த இரவின் பொழுதிலே சகோதரன் ஹால் அவர்கள் சகோ. டர்பின் அவர்களுடைய இடத்திலே கூட்டத்தை வைத்திருக்கிறார். அது நடக்கிற இடம். சகோதரனே, அதினுடைய விலாசம் என்ன? (அதற்கு அந்த சகோதரன் எனக்கு தெரியாது என்கிறார்) தெரியாதா? (வேறொரு சகோதரன் வந்து, பதினேழாவது மார்க்கெட் தெரு என்று அறிவிக்கிறார்) ஓ லூயிவில் பதினேழாவது மார்க்கெட் தெருவிலே சுகமளிக்கும் கூட்டத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் கூட்டத்தை அங்கே வைத்திருக்கின்ற ஒரே காரணத்தினால் தான் நான் கூட்டத்தை கொண்டிருக்க விரும்பவில்லை. யாரோ ஒருவர், ஒரு இடத்தில் சுகமளிக்கும் கூட்டத்தை ஒழுங்கு செய்து அதே இடத்தில் வேறொருவர் கூட்டத்தை ஆயத்தப்படுத்தி என்னை அழைப்பாரானால், நான் அங்கே போக வெறுப்பேன். ஆகவே தான் இந்த காலை வேளையிலே, சகோதரன் ஹால் அவர்கள் சகோதரன் டர்பென் அவர்களுடைய இடத்தில் கூட்டத்தை வைக்கிறதற்கு நான் கனத்தை கொடுக்கும்படி இதைச் செய்தேன் என்று கூறினேன். ஏனெனில் அவர்கள் இருவருமே எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். சகோதரன் ஹால் அவர்கள் அங்கு சுகமளிக்கும் கூட்டத்தை நடத்தும் போது நான் இங்கு அதே சுகமளிக்கும் கூட்டத்தை நடத்த விரும்பவில்லை. அதில் நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். நாம் அவரை நேசிக்கிறோம். 77இப்பொழுது சகோதரன் ஓக்கி நீர் எந்த இடத்தில் தங்கியிருக்கிறீர்? (நாற்பது முப்பது வெஸ்ட் மார்கெட் என்கிறார். சகோதரன் ஓக்கி) ஓ, நாற்பது - முப்பது வெஸ்ட் மார்கெட்டில் இருக்கிறீர்கள். அந்த சகோதரனும் உங்களுடன் இருக்கிறாரா? இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறீரா? நல்லது. இப்பொழுது முப்பது நாற்பதாவது வெஸ்ட் மார்கெட்டில் (நாற்பது - முப்பது வெஸ்ட் மார்கெட் என்கிறார் ஒருவர்), ஓ, நாற்பது - முப்பது வெஸ்ட் மார்கெட். அது லூயிவிலில் இருக்கும் நாற்பது - முப்பதாவது வெஸ்ட் மார்க்கெடில் நடக்க இருக்கிறது. சகோதரன் ஓக்கி, நீங்கள் எவ்வளவு நாட்கள் அங்கே இருக்கப் போகிறீர்கள்? (முழு வாரமும் பிரசங்கம் செய்யப் போகிறேன் என்கிறார்) அடுத்த வாரம் முழுவதும் கூட்டத்தை வைத்திருக்கிறீரா? நல்லது இப்பொழுது சுகவீனமாய் இருக்கும் யாவரும் நீங்கள், முப்பது- நாற்பதாவது வெஸ்ட் மார்க்கெட்டில் நடக்கும் (சபையார் நாற்பது - முப்பதாவது வெஸ்ட் மார்க்கெட்டில் நடக்கிறது என்கின்றனர்) ஓ, அது சரி. நாற்பது முப்பது வெஸ்ட் மார்க்கெட்டில் நடக்கிறது. நல்லது. இங்கே இன்னும் யாராவது... நான் இன்னும் சில ஊழியக்காரர்களைப் பார்த்தேன். சகோதரனே, நீங்கள் எங்காவது கூட்டத்தை வைத்திருக்கிறீரா? என்ன ஐயா? இல்லையா. நல்லது. அது மிகவும் அருமையானது. சரி. இதோ இங்கே இருக்கிறாரே இந்த சகோதரன், இவர் யூதர்களிடத்தில் மிஷனரியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். சரியா? சரிதான், அவர் யூதர்களிடத்திலே மிஷனரியாக பணிபுரிகிறார். அவர் நியூ, ஆல்பெனியில் வசிக்கிறார் என நினைக்கிறேன். நாம் அவரை இங்கே கொண்டிருப்பதற்காக மிகவும் சந்தோஷமடைகிறோம். நான் யாரையாவது விட்டுவிட்டேனா? வேறு யாராவது இங்கே இருக்கிறீர்களா? நான் விடவில்லை என்று நம்புகிறேன். நான் யாரையும் விட விரும்பவில்லை. சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன், அவர் நியூ ஆல் பனியில் வசிக்கிறார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சகோதரன் டாம் மெரிடித் வானொலி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்கிறார். சகோதரன் மெரிடித்து, நீங்கள் சபையை கொண்டிருக்கிறீரா? ஓ சபை இல்லை, வெறும் ஒளிப்பரப்பு மட்டும் செய்கிறீர். சிலமணி நேரத்திற்கு முன்பாக அவர் அதைக் குறித்து அறிவித்திருந்தார். மற்றும் இங்கு சுற்றியிருக்கும் மக்களுக்காக சகோதரன் நெவில் அவர்கள் இன்றிரவு கூட்டத்தை இங்கு ஒழுங்கு செய்திருக்கிறார். அது மட்டுமல்ல, இந்த புதன் மற்றும் இந்த வாரம் முழுவதுமாய் கூட்டத்தை வைத்திருக்கிறார். மேலும் அவருடைய ஆராதனையானது சனிக்கிழமை காலையிலே வானொலியில் ஒளிபரப்பாகிறது. நல்லது. 78எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? அப்படியென்றால் “ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையோர் “ஆமென்” என்று சொல்லுகின்றனர்) நல்லது. நண்பர்களே. நீங்களும் இந்த சுவிசேஷத்தை அறிவித்து வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி இந்த மகத்தான ஊழியர்களோடு சேர விருப்பம் உடையவர்களாக இருப்பீர்களானால், நண்பர்களே, கர்த்தர் தாமே உங்களுக்கு அனுகிரகம் செய்வாராக. சமீபத்திலே ஒரு வாலிப பையன் மீது ஒரு இரும்பு கம்பியானது அவனை ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கமாய் வெளியேறி அவனை முழுவதும் காயப்படுத்தினது. ஆனால் அவன் அந்த விபத்திலிருந்து பிழைத்தான். அவனுடைய அருமையான தாயாரின் ஜெபத்தினால் அவன் பிழைத்தான். தேவன் அவனை ஏதோ ஒரு நோக்கத்திற்காக தப்புவித்தார். இந்த காலை வேளையில் நான் இந்த கூடாரத்திற்கு இன்று வருவதற்கு முன்பாக அந்த வாலிபனைச் சந்தித்தேன். அவன் என்னுடைய கையை குலுக்கினான். நான் அவனைப் பார்த்து “நீ தானே அந்த வாலிபன்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “நான் தான் அவன், ஐயா!” என்றான். தொடர்ந்து அவன், “ஐயா, நான் ஊழியத்திற்காக அழைப்பைப் பெற்றிருக்கிறேன்” என்றான். தேவன் அவன் மேல் இரக்கமாய் இருப்பாராக. இப்பொழுது என் அன்பான சகோதரர்களே... அதோ அங்கே பழுப்பு நிறகோட்டை அணிந்திருக்கிறானே, அவன் தான் அந்த வாலிபன். நாம் சந்திப்பில் இருக்கும் இந்த நேரத்தில், அவன் ஒரு ஒளிவிளக்காய் மாற கர்த்தர் அருள் செய்வாராக. மகனே, பூரண சுவிசேஷத்தை பிரசங்கம் செய். தேவனுடைய வார்த்தைகள் யாவற்றையும் எந்த ஒரு காரியத்திற்காகவும் சமரசமாகாமல், சுவிசேஷத்தை முழுவதுமாக பிரசங்கம் செய். நீ உன்னுடைய கடமையின் பாதையிலே நேர்த்தியாய் நில். அப்போது தேவன் உன்னை ஒரு பெரிய வீரனாக மாற்றுவார். 79இப்பொழுது, நாம் வியாதியஸ்தர்களுக்காக ஒரு ஜெபத்தை கடைசியாக ஏறெடுக்கலாம். எங்கள் பரலோகப் பிதாவே, இந்த காலை வேளையில் இந்த வாலிபனுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த வாலிபன் இந்த காலை வேளையில், கூட்டத்திலே அமர்ந்து, உம்முடைய வார்த்தையைக் கேட்டும், ஊழியக்காரர்களுடைய இருதயம் கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டும் மற்றும் அவர்களைக் கடந்துபோன வியாதியஸ்தர்கள் மேல் அவர்கள் கரங்களை வைத்ததையும் பார்த்திருக்கிறான். அதுமட்டுமல்ல, குருடர்களாய் இருந்தவர்களும், செவிடரும், வாய் பேசாதோரும், முடவரும் புற்று நோயிலிருந்தவரும் அது போன்றவர்கள் சுகமடைந்தார்கள் என்று தங்களுடைய கரத்தை உயர்த்திக் காண்பித்த சாட்சியையும் கண்டிருக்கிறான். அது நிச்சயமாகவே ஒரு சவால் தான். மேலும் நாங்கள் இந்த பரிசுத்தமான வார்த்தையை நோக்கிப் பார்க்கும்போது, இவ்விதமான நாட்கள் வரும் என்று வேதம் உரைத்திருக்கிறதைப் பார்க்கிறோம். இதோ நாங்கள் சரியாக அந்த நாட்களிலே இருக்கிறோம். ஓங்கிய புயத்தோடு சர்வ வல்லமையுள்ள தேவன் அற்புத அடையாளங்கள் செய்கிறதைக் காண்கிறோம். பெருமழையின் இரைச்சலை வானத்தில் கேட்கிறோம். இவைகளின் மூலம் நாங்கள் அந்த கடைசி மழையின் மகத்தான நாட்களிலே இருக்கிறோம் என்பதை அறிகிறோம். தொடர் நிகழ்வுகள் என்கிற சங்கிலியினாலே சாத்தான் கட்டப்பட்டு பாதாளத்திலே எறியப்படுவான். அப்போது அவனால் இனி ஒருபோதும் தேசங்களை வஞ்சிக்கும்படி வரமுடியாமல் போகும். பூமியிலே ஆயிரவருட அரசாட்சி நடைபெறும், அங்கே நாங்கள் கர்த்தராகிய இயேசுவைப் போற்றி, புகழ்ந்து, மகிமைப்படுத்தி ஆராதித்து; ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாய், கர்த்தாதி கர்த்தராய் அவரை முடிசூட்டிக் கொண்டிருப்போம். 80மேலும், அணுசக்திகள் ஒரு நாளிலே வெடிக்கும். அப்போது அதிலிருந்து வெளியாகும் ஹைட்ரேஜன்களினால் இந்த பாவமுள்ள பூமியும் வெடித்துச் சிதறும். மற்றும் சமுத்திரமும் தண்ணீரும்... ஓ, கடல் காய்ந்து வற்றிப்போகும் அளவிற்கு கதறி அழும். ஓ தேவனே, அப்போது சூரியன் பிரகாசிக்க மறுக்கும், சந்திரனும் அதினுடைய வெளிச்சத்தை தர மறுக்கும். வானத்தின் நட்சத்திரங்களும், பெருங்காற்றினால் அத்திமரம் பருவ காலத்திற்கு முன்பாக அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, பூமியின் மேல் விழும். அப்போது மனிதர்கள் பாறைகளையும் மலைகளையும் கதறி அழைப்பார்கள். அப்படியானால் மனிதர்களுடைய ஜீவன் அவர்களுக்கு எம்மாத்திரம்? அதன்பின் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்புவார்கள். ஓ! அந்த சொர்கம் மிகவும் இனிமையுள்ளது. தேசங்கள் இனி ஒன்றின் மேல் ஒன்று பட்டயத்தை உயர்த்தாது. நாங்களும் வியாதியஸ்தருக்கான ஜெப வரிசையை அங்கே ஒருபோதும் கொண்டிருக்கமாட்டோம். இன்றே அந்த இரட்சண்ய நாள். பிதாவே, இந்த மக்களை உம்மிடத்தில் கொண்டு வந்திருக்கிறோம். “என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று கூறினதைக் கொண்டு இயேசுவின் நாமத்திலே இவைகளைக் கேட்டிருக்கிறோம். இவைகள் எங்களுடைய ஜெபத்தினால் நடக்கும் என்பதின் பேரிலே விசுவாசம் கொண்டிருக்கவில்லை, ஆனால், “என் நாமத்தினால் பிதாவினிடத்தில் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று நீர் சொன்னதின் பேரிலே நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம். 81சாத்தானே, மிகவும் பொல்லாங்கானவனே, நீ இந்த மக்களை கட்டி அனேகர் மேல் மரணத்தைக் கொண்டு வந்து அவர்களை முடவர்களாக்கி இருக்கிறாய். அனேகரை குருடர்களாயும், மற்றும் இதுபோன்று எல்லாவிதமான பொல்லாங்கையும் செய்திருக்கிறாய். ஆனால் சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டவன். நாங்கள் இயேசுவானவர் கற்பித்தபடி செய்திருக்கிறோம், இதினிமித்தம் நீ தோற்கடிக்கப்பட்டிருக்கிறாய். ஆதலால் எங்களுடைய விசுவாசத்தைக் கொண்டு சொல்லுகிறோம். இந்த மக்களை விட்டுப்போ. இயேசுவின் நாமத்திலே இந்த மக்களை விட்டுவெளியே வா! வெளியே வா! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒவ்வொருவரும் குணமடைவார்களாக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இப்பொழுது விசுவாசத்தைக் கொண்டிருங்கள். இயேசு என்னை சுகமாக்குகிறார் என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன் என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன் என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன். நான் அவரை அவருடைய வார்த்தையின் படியாய் ஏற்றுக் கொள்கிறேன். நான் அவரை அவருடைய வார்த்தையின் படியாய் ஏற்றுக் கொள்கிறேன். அவர் எனக்கு விடுதலையை இலவசமாய் அளிக்கிறார் நான் அவருடை வார்த்தையின் படியாய்அவரை ஏற்றுக் கொள்ளுகிறேன் என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன் என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன் என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன். இயேசு இப்பொழுது என்னை சுகமாக்குகிறார் 82நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்” என்கின்றனர்) என் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன். சகோதரன் சவுல், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சகோதரன் டோனி, தேவன் அதை செய்வார் என்று விசுவாசிக்கிறீர்களா? ஆமென். சகோதரி ஸ்நைடர் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சகோதரியே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “விசுவாசமானது நம்பப்படுபவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது'' மகத்தான எரிகோ மதில், விசுவாசத்தினாலே விழுந்ததைக் கண்டோம். விசுவாசத்தினால் கிறிஸ்து உங்களை நடத்துகிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆமென். நாம் அதை விசுவாசிக்கிறோம். நீங்கள் கொஞ்சம் கூட சந்தேகிக்க வேண்டாம். ஒருபோதும் சந்தேகத்தின் நிழல் கூட வேண்டாம். தேவன் அதை முடித்து வைப்பார். அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவர் நிச்சயம் செய்வார். நான் செய்யவேண்டியதெல்லாம், ”விசுவாசிப்பவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'' என்று சொன்னதை அப்படியே செய்யவேண்டும் அவ்வளவுதான். ஆமென். அவர் அருமையானவர் இல்லையா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்) இப்பொழுது நாம் முடிவான ஜெபத்திற்கு நம்முடைய தலைகளை சற்று தாழ்த்தலாமா. நாம்... (நீங்கள் கொஞ்ச நேரம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியங் கொள்ளுங்கள்). நாம் ஜெபத்திற்காக தலைகளை தாழ்த்தி இருக்கும் இந்த வேளையிலே சகோதரன் நெவில் நம்மை ஜெபத்தில் நடத்தும்படி கேட்டுக் கொள்ளலாம். அவர் வருமட்டும், அப்படியே நாம் தலைகளை தாழ்த்தியவர்களாக இந்தப் பாடலை மெதுவாய் பாடிக் கொண்டிருக்கலாம். என்னால் முடியும், நான் செய்வேன், நான் விசுவாசிக்கிறேன் என்னால் முடியும், நான் செய்வேன்... அவர் சரியாக, உங்கள் பக்கத்திலேயே இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டிருங்கள். அவர் காரியங்களை தத்ரூபமாக்கும்படி அங்கே இருக்கிறார். இப்பொழுது அவருடைய வல்லமை உங்களுக்குள் வருகிறதை உணருங்கள். என்னால் உணரமுடியுமா என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாகவே உங்களால் முடியும். நான் அவரை அவருடைய வார்த்தையின் படியாக ஏற்றுக்கொள்கிறேன் நான் அவரை அவருடைய வார்த்தையின் படியாக ஏற்றுக்கொள்கிறேன் அவர் எனக்கு விடுதலையை இலவசமாய் அளிக்கிறார் (கல்வாரியின் மூலமாக) ஆகவே நான் அவருடைய வார்த்தையின் படியாக அவரை ஏற்றுக் கொள்கிறேன் நாம் தலைகளை தாழ்த்தியிருக்கலாம். இப்பொழுது, சகோதரன் நெவில், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால், சொல்லலாம்.